முடி கொட்டிய பிறகு அரசியலுக்கு வர்றாங்க.. முதல்ல இதை பண்ணுங்க.. விஜய்யை அட்டாக் செய்த வீரலட்சுமி
சென்னை: வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார்கள் என்றும், உங்க பணத்தை பாதுகாப்பதற்குதான் நீங்க அரசியலுக்கு வருகிறீர்கள் என்றும் நடிகர் விஜயை தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ளார். தற்போது கட்சியை பலப்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார் என்றும், அவருடைய பணத்தை பாதுகாக்க தான் அரசியலுக்கு வருவதாகவும் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி கூறினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
நடிகர்கள் வயசான காலத்தில் தலையில் முடி கொட்டி போன பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் பணம் தான் இல்லை. ஆனால் நடிகர்கள் சினிமாத்துறையில் சம்பாதித்த பணத்தை தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஆரம்ப பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள்.
முதலில் உங்க பணத்தை மக்களுக்கு செலவு செய்யுங்கள். உங்க ரசிகர்களுக்கு செலவு செய்யுங்கள். அதை விட்டுட்டு நேராக அரசியலுக்கு வருகிறீர்கள் என்றால் உங்க பணத்தை பாதுகாப்பதற்குதான் நீங்க அரசியலுக்கு வருகிறீர்கள். நடிகர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்.
விஜய் குடும்ப நிகழ்ச்சியில் வெள்ளி தட்டில் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று பாடகி சுசித்ரா ஓபனாக சொல்லியிருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் நீங்கள் தமிழக மக்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் டிரக்ஸ் சப்ளை பண்ண போகிறேன் என்று சொல்கிறாரா? அல்லது கொக்கைன் சப்ளை பண்ண போறீங்களா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் எல்லோரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்த போறீங்களா? இன்னைக்கு இளைஞர்கள் எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளனர். ஆனால் நடிகர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்கவே அரசியலுக்கு வருகிறார்கள்.
பாடகி சுசித்ரா சொன்ன போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு யார் யார் கொக்கைன் பயன்படுத்தினார்களோ அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்ற படை முன்னெடுத்துள்ளது.
விஜய் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நான் சொல்லவில்லை. அவர்கள் கேங்கில் இருந்த சுசித்ரா ஓபனாக ஒரு ஊடகத்தில் சொல்கிறார். இதில் ஆதாரம் இருக்கிறது இல்லை என்பது அப்பாற்பட்ட விஷயம். காவல்துறை சுசித்ரா மீது அடிப்படை விசாரணை மேற்கொள்ளவில்லை என்றுதான் நான் கேட்கிறேன்.
இதுவே ஒரு பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தினால் உடனடியாக காவல்துறை பயன்படுத்தி ரிமாண்ட் செய்கிறார்களா இல்லையா.. அதுபோல இந்த விவகாரத்தில் காவல்துறை ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications