டெல்லியில் விஜய்யை நாளை வரை "லாக்" செய்யும் சிபிஐ? என்டிஏ கூட்டணிக்கான அழுத்தம்? பரபரக்கும் தலைநகர்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக இன்றும் நாளையும் தவெக தலைவர் விஜய்யிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணை மூலம் அவரை என்டிஏ கூட்டணியில் இணைக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் Vijay, என்டிஏ கூட்டணியில் சேர்கிறாரா அல்லது தனித்து தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஜனவரி 10 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், விஜய்யிடம் சிபிஐ விசாரணை முடிந்துவிட்டது; இனி அவர் அழைக்கப்படமாட்டார் என தெரிவித்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு தினங்களுக்கு முன்பு விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. தவெகவினர் நேரம் கேட்டதால் அந்த விசாரணை இன்றைய தேதிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று டெல்லி சென்ற விஜய், இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே விஜய்யிடம் சிபிஐ விசாரணை இருக்காது என நிர்மல் குமார் கூறியிருந்த நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்படுவதால் பல கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் 22 கூட்டணி கட்சிகள் இணைந்துள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக உள்ளிட்ட பெரிய கட்சிகளும் சில சிறிய கட்சிகளும் இணைந்துள்ளன. இருப்பினும் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க இந்த கூட்டணி பலம் போதாது என பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் எப்படியாவது தவெகவை என்டிஏ கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் விஜய் தலைமையிலேயே கூட்டணி அமைந்து, அவரே முதல்வர் வேட்பாளர் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதால் அவர் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு குறைவு என கருதப்பட்டது. எனினும் டெல்லி பாஜக தலைமையிடம் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகவும், அவர் கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் சென்றதாக கூறப்படுகிறது.
விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைப்பதில் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தவெகவை எப்படியாவது என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கடந்த ஜனவரி மாதம் முதலே 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு, கரூர் வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் என்டிஏ கூட்டணியில் உள்ள ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமும் விஜய்க்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியாக போட்டியிடுவதற்குப் பதிலாக என்டிஏ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் அரசியல் ரீதியாக பல சாதனைகள் செய்யலாம் என்றும் கட்சியை வலுப்படுத்தலாம் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இருந்தாலும் விஜய் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே "மாற்று அரசியல்" என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விஜய், தற்போது எப்படி என்டிஏ கூட்டணியில் இணைவது என யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.
இதனால் விஜய்க்கு அழுத்தம் கொடுத்தேனும் அவரை என்டிஏ கூட்டணியில் சேர்க்க டெல்லி பாஜக தலைமைமுடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே விசாரணை முடிந்த நிலையிலும் மீண்டும் கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றும் நாளையும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதன் மூலம் தவெகவை என்டிஏ கூட்டணியில் இணைக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே வரும் செவ்வாய்க்கிழமைக்குள் விஜய், என்டிஏ கூட்டணியில் இணைகிறாரா அல்லது தனித்து தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications