சும்மா இருக்க மாட்டீங்களா.. விஜய் டெல்லி போற நேரம் பார்த்து! தவெக தலைகள் போட்ட ஆட்டம்! டெல்லி கோபம்?
சென்னை: தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆஜராக உள்ளார். இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தலைகள் செய்த செயல் ஒன்று பாஜக தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.
டெல்லிக்கு அழைத்த சிபிஐ
கரூர் தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆஜராகும்படி விஜய்க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். அவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."
"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை என்பதால் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று இரவு விஜய் டெல்லி செல்கிறார். நாளை இவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
முன்னதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் நடத்தினர்.
ஒரே கேள்விகளை வேறு வேறு கோணங்கள்
முக்கியமாக ஒரு சில கேள்விகளை பல்வேறு கோணங்களில் மாற்றி மாற்றி சிபிஐ எழுப்பி உள்ளனர். பேப்பர் ஒன்றில் எழுதிக்கொடுத்து அதில் பதில்களை நிரப்ப கூறி உள்ளனர். இதில் சில கேள்விகள் கடுமையானதாகவும்.. குழப்ப கூடியதாகவும்.. எப்படி பதில் அளித்தாலும் சிக்கலை ஏற்படுத்த கூடியதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் பின் வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்போது விஜய் விசாரணை
இப்படிப்பட்ட நிலையில்தான் தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில் ஆஜராக உள்ளார். இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தலைகள் செய்த செயல் ஒன்று பாஜக தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம். அதன்படி பாஜகவிற்கு எதிராக இவர்கள் #BJPFearsJanaNayagan என்று நேற்று இரவு முழுக்க டேக் ஓட்டிக்கொண்டு இருந்தனர்.
பாஜகவை கடுமையாக தாக்கி.. ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் போக அவர்கள்தான் காரணம் என்பது போல காட்டி கடுமையாக டேக் ஓட்டிக்கொண்டு இருந்தனர். #BJPFearsJanaNayagan என்று நேரடியாக பாஜகவை தாக்கி இவர்கள் டிரெண்ட் செய்ததற்கு பாஜக தரப்பில் இருந்தும் கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டன. சரியாக விஜய் டெல்லி செல்லும் நேரம் இப்படி செய்வது விஜய்க்கு சிக்கலாக உருவெடுத்துள்ளது.
-
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications