ஜனநாயகன் பிரச்சனை.. "மனதளவில் ரெடியா இருந்தேன்".. NDTVக்கு பேட்டி கொடுத்த விஜய்!
சென்னை: NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால் மற்றும் குழுவினர் தவெக தலைவர் விஜய்யுடன் 45 நிமிட உரையாடலை நடத்தியுள்ளனர். அதில் விஜய் 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரூர் துயரச் சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், சென்னையில் நடைபெற்ற இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

நீங்கள் ஒரு கிங்மேக்கரா? என என்.டி.டிவி குழுவினர் எழுப்பிய கேள்விக்கு, "நான் போராடி வெற்றி பெறுவேன். நான் ஏன் ஒரு கிங்மேக்கர் என்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் எனது ரோல் மாடல்கள். நான் என் சினிமா கரியரை திட்டமிட்டே கைவிட்டேன். அது எளிதானது அல்ல. இப்போது என் கவனம் மக்களின் பிரச்சனைகள் மீது உள்ளது." என தவெக தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், "கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலைப் பற்றி நான் மிகவும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. என் தந்தை அரசியல் இயக்குநராக இருந்தவர். அதனால் இந்த உலகத்தை அருகிலிருந்தே பார்த்தும் புரிந்தும் நான் வளர்ந்தேன். 33 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவை நான் மனப்பூர்வமாக கைவிட்டுள்ளேன். அது எளிதான முடிவு அல்ல. ஆனால் முடிவு எடுத்துவிட்டேன். நீண்ட பயணத்திற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன்." என விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படம் சிக்கலில் உள்ளது. அரசியலில் நுழைந்தது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதித்ததா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள விஜய், "என் அரசியல் நுழைவால் ஜனநாயகன் பட ரிலீஸ் பாதிக்கப்படுவதால் என் தயாரிப்பாளருக்காக வருத்தமாக இருக்கிறது. என் அரசியலால் படங்கள் பாதிக்கப்படலாம் என்று நான் முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் நான் தயாராகவும் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தான் தேசிய ஊடகத்துடன் எனது முதல் உரையாடல். இதை நான் ஒரு mock interview போன்றே பார்க்கிறேன். நான் போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நான் என் உரைகளின் மூலம் பேசிக்கொண்டே இருக்கிறேன். நான் எப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சரியான நேரத்தில் நான் ஊடகங்களிடம் பேசுவேன்." என விஜய் தெரிவித்ததாக என்.டி.டி.வி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர் -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?











Click it and Unblock the Notifications