நடிக்காதீங்க விஜய்.. ஹீரோ மனநிலையில் இருந்து வெளியே வாங்க.. விஜயை விட்டு விளாசிய நாம் தமிழர்!
சென்னை: ஹீரோ மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள் விஜய் ! காலையில் 12 மணிக்கு கரூர் வருவதாக அறிவித்துவிட்டு 7 மணிக்கு வந்தது ஏன் ? மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் வெயிலில் காத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? என்று நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். விஜய் தனது வீடியோவில் எங்கும் மன்னிப்பு கேட்காதது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
விமர்சனம்
இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். அதில், ஹீரோ மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள் விஜய் ! காலையில் 12 மணிக்கு கரூர் வருவதாக அறிவித்தவிட்டு 7 மணிக்கு வந்தது ஏன்? மக்கள் தண்ணீர் ,உணவு இல்லாமல் வெயிலில் காத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? ஆண்களை விடுங்கள் ஆயிரக்கணக்காண பெண்கள் இயற்கை உபாதைக்கு ஒரு கழிவறை கூட இல்லாமல் 8 மணி நேரம் நின்றது உங்களுக்குத் தெரியாதா ?
காவல்துறை கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என 5 மணிக்கே எச்சரித்தும் வம்படியாக உள்ளே சென்றது ஏன்? 5 மணிக்கு பிறகு உங்களை பார்க்க கூடிய கூட்டத்தை பார்க்காமல் பேருந்துக்குள் சென்றது ஏன்? உங்கள் தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு 3 நாள் கழித்து வீடியோ போட வெக்கமா இல்லையா ?

தைரியம் இருந்தால் ஒரு ஊடக சந்திப்பை உங்கள் வீட்டிலேயோ அலுவலகத்திலோ நடத்தலாமே! நேற்று எடுத்த வீடியோவை அழித்துவிட்டு புது வீடியோ எடுத்து போட கூச்சமா இல்லையா? நடிக்காதிங்க விஜய் !,.
நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டதை மறைக்க நேற்று எடுத்த காணொளியை எடிட் செய்து போட்ருக்காரு நம்ம பிணநாயகன் ! என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி செய்துள்ள போஸ்டில், கேடுகெட்ட அயோக்கியன்!
மனச்சாட்சி இருக்காடா உனக்கெல்லாம்? அப்டி என்னடா பிணத்தின் மேல அரசியல்? கரூரில் பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காது மொத்தக் கட்சியும் எங்கே போனது அண்ணே? மருத்துவமனைப் பக்கம் ஒருவர்கூட எட்டிப் பார்க்கவில்லையே? என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications