கரூரில் மட்டும் ஏன் சார்? ரசிகர்கள் பாணியில்.. வதந்தியை பரப்பும் விஜய்? இது என்ன சினிமாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் பேசி உள்ளது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

TVK Vijay

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் ரசிகர்கள் பாணியில் புகார்

விஜய் ரசிகர்கள் பலர் கரூரில் மட்டும் எப்படி இது நடந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து வதந்திகளை பரப்பி வந்தனர். அவர்களிடம் வதந்தி பரப்ப வேண்டாம் என்று சொல்லாமல், ரசிகர்களை நல்வழிப்படுத்தாமல்.. விஜய் முதிர்ச்சி இன்றி வதந்திகளுக்கு சோறு போடும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விஜய் கேட்டு இருக்கிறார்.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க என்றெல்லாம் பேச தெரிந்த தவெக தலைவர் விஜய்க்கு ஒரு மன்னிப்பு கேட்க தெரியவில்லை என்பதுதான் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

TVK Vijay

போலீஸ் விளக்கம்

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விரிவான விளக்கங்களை கொடுத்துவிட்டது. கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.

கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான் இந்த இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது.

தவெக விஜய் செய்த தவறு

தற்போதைய இடத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்புரை செய்திருக்கிறது 10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள். ஆனால் 10,000-ஐ விட அதிகமாக எதிர்பார்த்துதான் காவல்துறையினர் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் 27,000 பேர் வரை வந்தார்கள்.

ஆனால் மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டிவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. முடிவில் காரணம் தெரிய வரும் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இதை மீறி கரூரில் எதோ தவறான விஷயம் திட்டமிட்டு நடத்தப்பட்டது போல விஜய் வதந்தியை பரப்பி வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+