Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா?
சென்னை: திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைந்த நிலையில் அந்த கூட்டணியை மக்கள் நல கூட்டணி என தவெக தலைவர் விஜய் கிண்டல் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இன்று அறிவித்திருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் என சொன்னார்கள்.
ஆனால் என்னை பொருத்தமட்டில் மக்களை காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பம். பெரிய பேக்கிரவுண்ட் இல்லை என சொல்வார்கள். கூட்டம் சேர்ந்தால் ஓட்டாகுமா, சீட்டாகுமா என்றெல்லாம் கேட்பார்கள். இங்கு இருப்போர் சாதாரண குடும்பத்தினர் அல்ல, அரசியல் தெரிந்தவர்கள்தான்.
எனவே அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கிடையாது. எம்எல்ஏன்னா சும்மா இல்லை. எல்லை காப்பானாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்றால் தொகுதிக்கான எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் நான் தேர்வு செய்துள்ளேன்.
களத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய ஆட்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். எல்லாம் இடத்திலும் நான் செல்ல முடியாதுல்ல. நானே பார்த்து பார்த்து வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளேன்.... மக்களே இவர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. நம்மளுடைய அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அவர்களை வேட்பாளராக ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
கூட்டம் ஒட்டா மாறதா என்று கேட்கிறார்கள். இந்த தேர்தல் எல்லாரும் சொல்லும் தேர்தல் கிடையாது. இது இருமுனை போட்டி மட்டும்தான். ஒன்னு இந்த மக்கள் கூட்டணியான டிவிகே, இன்னொன்று ஸ்டாலின் சார் கூட்டணி.
கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் கூச்சல் சத்தம் முடியவில்லை. விஜய்க்குலாம் என்னப்பா செல்வாக்கு இருக்கு, கூட்டத்தை வச்சி சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வரக்கூடிய கூட்டம் கூட்டம் வந்தால் பெரிய ஆளா, கூட்டம் ஓட்டா மாறுமா, ஓட்டு சீட்டா மாறுமா என வன்மத்தோடு கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று தான் இந்த தேர்தல் எல்லாரும் சொல்வது போல் 4 முனை, 400 முனை எல்லாம் கிடையாது. இரு முனை போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்த தேர்தல்!
அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரு, மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதான இருக்குது! ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதாலயோ என்னவோ ஸ்டாலின் சார், மக்கள் நல கூட்டணியாகவே மாத்திட்டாரு.
உடைந்த கிளாஸை ஒட்ட வைத்த மாதிரி, கிழிந்த துணியை தைச்ச மாதிரி, இது ஒரு ஒட்டு போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்! அதனால் நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பது போல் உங்களது ஓட்டை சிந்தாம, சிதறாம நமது தவெக வேட்பாளர்களுக்கும் விசில் சின்னத்திற்கும் தயவு செய்து ஓட்டு போட்டுடுங்க! இவ்வாறு விஜய் பேசினார்.
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தேமுதிக, ஜி.கே.வாசன் ஆகிய கட்சிகள் இணைந்ததே மக்கள் நல கூட்டணி. இந்த கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் கண்டது. ஆனால் இந்த கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தனர். ஏற்கெனவே விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக இருந்து வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்ததால் மக்கள் நல கூட்டணி என விஜய் விமர்சித்துள்ளார்.
விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர். அவர் மீது எந்த ஊழல் கறையும் படிந்தது இல்லை. அவரை எந்த ஒரு கட்சி தலைவரும் கடுமையாக விமர்சித்ததில்லை. ஆனால் விஜயகாந்தின் செந்தூரபாண்டி மூலம் திரைத்துறையில் ஒரு இடத்தை பிடித்த விஜய் இன்று விஜயகாந்தின் கட்சி படுதோல்வி அடைய வேண்டும் என நினைக்கலாமா என கேள்வி எழுந்துள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications