விஜய் செய்தி சேனல் ஆரம்பிக்கப் போறாரு! அமௌன்ட் கொடுப்பது ஆதவ் அர்ஜுனா? சேனல் பேரு என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஆரம்பிக்கும் முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'வெற்றி தொலைக்காட்சி' (Vettri TV)என்ற பெயருடன் தொடங்கப்பட இருக்கும் இந்த நிறுவனத்திற்கு ஆதவ் அர்ஜுனா நிதி அளிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சிக்கான அனுமதி பெறும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கும் நிலையில் பிரபல ஊடகவியலாளர்களுடன் பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகத்தை 2026 தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார். கட்சியில் அனுபவம் இல்லாத தலைவர்களால் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில் அதனை சரி செய்யும் விதமாக மாற்றுக் கட்சிகள் இருக்கும் முக்கிய தலைவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Vijay News Channel tvk

தமிழக வெற்றிக் கழகம்

முதல் விக்கெட்டாக செங்கோட்டையனும் இரண்டாவது விக்கெட்டாக நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். வரும் நாட்களில் மேலும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பிற கட்சிகளின் நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறது தமிழக வெற்றிக் கழகம்.

விஜய் அரசியல்

குறிப்பாக தமிழக அளவில் மாவட்ட ரீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் அடுத்ததாக தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவு இருக்கிறது. அதே நேரத்தில் சாமானிய மக்கள் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராமப்புற மக்கள் சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதை அடுத்து கிராம மக்களிடமும் தமிழக வெற்றிக்கழகத்தை கொண்டு சேர்க்கும் வகையில் புதிய திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார் விஜய்.

டிவி சேனல் தொடக்கம்

அதுதான் தொலைக்காட்சி ஆரம்பிப்பது. தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஊடக ஆதரவை பெற்று இருக்கின்றன. சில கட்சிகள் நேரடியாகவே தொலைக்காட்சிகளையும் நடத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் நாளிதழ்கள், இணையதள ஊடகங்களையும் சில கட்சிகள் நடத்தி வருவதோடு, அந்த ஊடகங்களின் தலைமையோடு நெருக்கம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகமும் புதிய தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறது.

வெற்றி தொலைக்காட்சி

கட்சியின் பெயர் தொலைக்காட்சியிலும் இருக்கும் வகையில் 'வெற்றி தொலைக்காட்சி' என்ற பெயரில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா நிதி மூலம் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட இருக்கிறது.

தொலைக்காட்சி

நேரடியாக விஜய் பெயரில் இல்லாமல் தனியாக மீடியா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் கிளை நிறுவனமாக இந்த தொலைக்காட்சி செயல்படும் என சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் சாதாரணமாக செய்து விட முடியாது. அதற்கேற்ற தொழில்நுட்ப கட்டமைப்பு, தொழில்நுட்ப வல்லுநர்கள், அதற்குப் பிறகு செய்தி ஆசிரியர்கள், இணை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள்,செய்தியாளர்கள், விசுவல் எடிட்டர்கள், மார்க்கெட்டிங் என பெரும் படையே தேவை.

ஆதவ் அர்ஜுனா

தற்போது அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக ஊடகங்களில் பணியாற்றிய பணியாற்றிக் கொண்டிருக்கும் சில முக்கிய ஊடகவியலாளர்களிடம், ஆதவ் அர்ஜுனா மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது முதல் கட்ட அளவில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் தேர்தலுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மார்ச் மாதத்திலேயே வெற்றி தொலைக்காட்சி மக்களின் இல்லங்களை தேடி வரும் என்கின்றனர் நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+