Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது புதுசா இருக்குங்க! அரசியலில் புதிய மாடலை கொண்டு வரும் விஜய்! காஞ்சிபுரத்தில் இன்று பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு மக்கள் சந்திப்பை மீண்டும் தொடங்குகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். மக்கள் சந்திப்பு என்றாலே தலைவர்கள் 'மக்களை தேடி' என்ற நிலையை மாற்றி, உள்ளரங்கத்தில் மக்கள் விஜய் தேடிச் சென்று பார்ப்பது என புதிய மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு விஜய் உரையாக்கிய மக்கள் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, மக்கள் முன்னிலையில் பேசாமல், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

இடையில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டதோடு பெரிதாக எதையும் செய்யவில்லை. இந்நிலையில், கரூர் சோகத்தைத் தாண்டி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்கள் சந்திப்பைத் துவக்க முடிவு செய்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

Vijay tvk tamilaga vettri kazhagam

விஜய் மக்கள் சந்திப்பு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறிய பிறகே, தனது கட்சியின் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டி, அதில் த.வெ.காவின் 'மக்கள் பயணம்' மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தார். இந்நிலையில், கரூர் சம்பத்தை போல் நடக்கக் கூடாது, பொதுக்கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய முறையை கையாள வேண்டியது அவசியம் என்ற காரணத்தால், விஜய் இந்த முறை பிரச்சார முறையை முற்றிலும் மாற்றியுள்ளார். வெளிப்புற கூடங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட உள்ளரங்கு மக்கள் சந்திப்பு என்ற புதிய மாடலை அவர் அறிமுகப்படுத்துகிறார்.

த.வெ.க பிரசாரம்

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 4,000 பேருடன் 'மக்கள் பாதுகாப்புப் படை' உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு முன்னாள் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி வழங்கி வருகின்றனர். இந்த பயிற்சி செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திருவண்ணாமலை தீபத் திருவிழா காரணமாக சேலத்தில் டிசம்பர் 4 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரசாரம் தள்ளிப்போனது.

உள்ளரங்கு கூட்டம்

இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று, விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பை இன்று (23 நவம்பர் 2025) நடத்துகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வு, முழுக்க முழுக்க உள்ளரங்கில் நடைபெறுமாறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்க QR குறியீடு கொண்ட நுழைவு சீட்டுப் பெற்ற 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

காஞ்சிபுரம் நிகழ்வு

இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் என். ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். "வேறு யாருக்கும் நுழைவு அனுமதி கிடையாது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் பாதுகாப்புப் பணிகள் அனைத்தையும், விஜய்யின் புதிய மக்கள் பாதுகாப்புப் படை மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. கரூர் சோகத்திற்குப் பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையில் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்குவது, அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+