பிரசாரத்தை திடீர் திடீரென ரத்து செய்யும் விஜய்! புரசைவாக்கம் ரோடு ஷோவும் ரத்தால் தொண்டர்கள் ஏமாற்றம்
சென்னை: விஜய்யின் ரோடு ஷோ இன்றும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் ரோடு ஷோ செல்ல இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு விஜய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். திடீரென பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீண்ட நேரமாக காத்திருந்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடும் சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூரில் விஜய் இன்று ரோடு ஷோ சென்றார். தொடர்ந்து எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கத்தில் விஜய் ரோடு ஷே செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜய்யின் ரோடு ஷோவை பார்க்க இருந்த மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஓரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் மே 4 அன்று வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தினமும் விஜய் வாக்கு சேகரிப்பார்.. தினமும் அவரை பார்க்கலாம் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
ஆனால் அதன்பிறகும் சரியாக விஜய்யால் பிரச்சாரத்தை திட்டமிட முடியவில்லை. தினமும் பிரசாரத்திற்கு அனுமதி இல்லை, ரத்து என்று செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் ஒரு நாள் பிரசாரம் மறுநாள் ஓய்வு என ஒரு நாள் விட்டு விட்டு விஜய் பிரசாரம் செய்து வந்தார். மறுநாளுக்கு பிரசாரத்திற்கு அனுமதி இருந்தாலும் விஜய் தரப்பில் ரத்து என கூறப்படுகிறது. இப்படியாக கடந்த சில நாட்களாகவே தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று விஜய் தி நகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டார். தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடும் சென்னை தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூரில் விஜய் இன்று ரோடு ஷோ சென்றார். தொடர்ந்து எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கத்தில் விஜய் ரோடு ஷே செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விஜய்யின் ரோடு ஷோவை பார்க்க இருந்த மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. திடீரென பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நீண்ட நேரமாக காத்திருந்த தவெகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்











Click it and Unblock the Notifications