விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக
சென்னை: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதல்வர் விஜய், நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறார். குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் செயல்பாடு குறித்து முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 5 தொகுதி இடைத் தேர்தல்களுக்கும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள். புதிய தலைமுறையினருக்கும், இளைஞர்களுக்கும் முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, ஒவ்வொரு துறைக்கும் நீண்டகால திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
விஜய்
அதோடு, பொதுவெளியில் பேசும்போதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அமைச்சர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக அமைப்புகள், சமூகக் குழுக்கள் மற்றும் சாதி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தற்போதைக்கு தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள்
அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் சர்ச்சையாக மாறும் வாய்ப்பு இருப்பதால், தேவையற்ற விவாதங்களை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் யாரும் சர்ச்சைகளில் சிக்காமல் நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே தலைமை விருப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவையில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர், மானிய கோரிக்கை விவாதங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
அதோடு, காலியாக உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் மட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கட்சியின் 77 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய்
இந்த பணிகளை விரைந்து முடித்து உடனடியாக மக்கள் குறைகளை கேட்கும் பணியை தொடங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து அறிவுறுத்தல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நேரடியாக அணுகக்கூடிய வகையில் தொகுதி அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும், மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல்
அதேநேரத்தில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மீது அரசு மற்றும் கட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், மக்கள் தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கைகளை சேகரிக்க பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையம்
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறையால், தேர்தல் ஆணையமும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகள் விரைவில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டுக்குள் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது தமிழக அரசியல் வரலாற்றில் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்த தேர்தல் மிகப்பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் தங்களது பலத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இதனால் வேட்பாளர் தேர்வு முதல் களப்பணி வரை அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்கின்றனர் தவெகவினர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications