விஜய் - சங்கீதா வழக்கு விசாரணை பொதுவில் நடக்குமா? எல்லாமே பிளான் செய்த விஜய்? வழக்கறிஞர் ஷாக் தகவல்
சென்னை: நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பாக குடும்ப நல வழக்கறிஞர், சுந்தர பாண்டிய ராஜா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் இமேஜுக்கு பெரிய அடியாக இது இருக்கும் என்று சொல்ல முடியாது. இதில் வழக்கு விசாரணை தனியாக நடக்கும். கேமரா முன் நடக்கும். மக்கள் முன் நடக்காது. இது விவாத பொருளாக மாறாது. குடும்பநல வழக்குகள் பொதுவில் நடக்காது. அதனால் அது பெரிதாக மாறாது.
வேட்புமனு தாக்கல் சமயத்தில்.. விஜய் மனைவி பற்றிய தகவலை குறிப்பிடாமல் நிறுத்தலாம்.. நாங்கள் தனியாக இருக்கிறோம்.. அதனால் அவரின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய முடியாது என்று விஜய் ஒரு ஆர்டர் வாங்கி தந்தால் அப்படி நடக்கலாம். இதை விஜய் பிளான் செய்து செய்கிறார் என்று சொல்ல முடியாது. அதாவது சொத்து மதிப்பை மறைக்க இப்படி விஜய் செய்கிறார் என்று சொல்ல முடியாது. விஜய் பிளான் அப்படி எல்லாம் பிளான் செய்கிறார் என்று சொல்ல முடியாது.

அவர்கள் விவாகரத்து செய்ய தனிப்பட்ட காரணங்கள்தான் இருக்கும். சொந்த காரணங்களால்.. சொந்த சுதந்திரம் காரணமாக இவர்கள் விவாகரத்து செய்யலாம். தனிமனித சுதந்திரத்தை கெடுத்துக்கொண்டு வாழ வேண்டமா என்று நினைத்துக்கொண்டு இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் .. அரசியல் தலைவர்களால் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. அதுவே கூட குடும்ப பிரச்சனைகளுக்கான காரணமாக அமைந்திருக்கும், என்று குடும்ப நல வழக்கறிஞர், சுந்தர பாண்டிய ராஜா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
விஜய் விவாகரத்து வழக்கு பின்னணி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications