250 கோடி கேட்ட சங்கீதா.. 35 கோடியில் டீலை முடித்த விஜய்! ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய பஞ்சாயத்து
சென்னை: மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பேச்சு நடந்ததாக நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.
வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி செட்டில்மெண்ட் தரவேண்டும் எனவும், மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் எனவும் சங்கீதா கேட்டதாகக் கூறப்படுகிறது.

மனைவிக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகளை தான் பார்த்து கொள்வதாக விஜய் ஒத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாளை இது தொடர்பாக நீதிமன்றத்தில் இருதரப்பும் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் விவாகரத்து
விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் உடனான தனது திருமண வாழ்வை முடித்து வைக்க வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட் முழுமையாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தாக்கல் செய்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சங்கீதா விஜய் பிரிவு
சுமார் 27 ஆண்டுகளாக நீடித்த மணவாழ்க்கைக்கு பின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். லண்டன் நகரத்தில் வாழ்ந்த அவர், விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின்னர் வாழ்க்கைத்துணையாக மாறியவர். 1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்பட வெற்றிக்குப் பிறகு விஜய்யை நேரில் சந்தித்தார் சங்கீதா.
சங்கீதா விவாகரத்து மனு
அதன் பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையை விஜய் பொதுமக்கள் கவனத்திலிருந்து விலக்கி வைத்திருந்தார். இந்நிலையில், சமீப காலமாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து பல்வேறு ஊகங்கள் பரவியது. இந்த நிலையில் தான், சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் செட்டில்மென்ட்
இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்த நிலையில் தற்போது சங்கீதாவுக்கு விவாகரத்து தர விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மனம் ஒத்து இருவரும் பிரிவதாக அறிவித்தால் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும் என்பதால் இது தொடர்பாக விஜய் தரப்பும் சங்கீதா தரப்பும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 250 கோடி ரூபாய் வரை தனக்கு செட்டில்மென்டாக தர வேண்டும் என சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய் மகன் - மகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தாக்கல் செய்த பட்டியலில் 900 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நான்கில் ஒரு பங்கை தான் சங்கீதா கேட்டிருக்கிறார். மேலும் அந்த தொகையை தனது மகன் மற்றும் மகளுக்கும் தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் சங்கீதாவுக்கு 35 கோடி செட்டில்மென்ட் அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், மகன் ஜேசன் மற்றும் மகளை தானே பார்த்துக் கொள்வதாக விஜய் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் இருவது தரப்பும் விவாகரத்துக்கு ஒப்புக் கொண்ட நிலையில் நாளை இது தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக! -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’ -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்! -
சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக..சரிந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை! விஜய் போட்ட பக்கா ப்ளான்..பாவம் இபிஎஸ் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications