உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்!
சென்னை: தவெக தலைவர் விஜய் உண்மையான காங்கிரஸ் அவர் பக்கம் இருப்பதாக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய் போலியான காங்கிரஸ் யார் என்பதை சொல்ல வேண்டும் என்று கூறிய ப.சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்திக்கும், காங்கிரஸ் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒருநாள் பிரச்சாரம், ஒருநாள் ரெஸ்ட் என்ற விஜய்யின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றாலும், பிரச்சாரத்தில் தவெக தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டார். இந்த பிரச்சாரங்களில் உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் இருப்பதாக பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் பேசுகையில், விஜய் யாரை உண்மையான காங்கிரஸ் என்று சொல்கிறார்.
நான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டவன். காங்கிரஸ் கட்சியின் முடிவு என்பது திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டும் என்பதுதான். விஜய் யாரை காங்கிரஸ் என்று சொல்கிறார் என்பதை சொல்ல வேண்டும். கிரிஷ் சோடங்கர் கோவ காங்கிரஸ் தலைவர். பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அவருக்கும் கட்சிக் கூட்டம், கட்சி வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து பிரவீன் சக்ரவர்த்திக்கு தொடர்பே கிடையாது.
கூட்டணி முடிவில் சில கருத்து முரண்பாடுகளில் ஒலித்திருக்கலாம். அதனை உண்மையான காங்கிரஸ், போலியான காங்கிரஸ் என்று பிரித்து பார்ப்பதே வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பேதமையாக இருக்கிறது. விஜய்யை பார்க்கும் போது உண்மையான காங்கிரஸ் என்று யாரை சொல்கிறார் என்று கண்டிப்பாக கேட்கிறேன்.
பெட்டிக் கொடுத்தார்கள் என்று பேசுவது காங்கிரஸ் கட்சியை சிறுமைப்படுத்தும் செயல். நாங்கள் விஜய்யை காசு கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள் என்று சொன்னோமா.. அப்படி ஒருபோதும் பேசி பழகியது கிடையாது. அதேபோல் திமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள ரூ.8 ஆயிரம் கூப்பன் என்பது பொருளாதார யுக்தி.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பேருந்து திட்டம் உள்ளிட்டவை யுனிவர்சல் பேசிக் இன்கமில் வரும். அதனை பணமாக கொடுக்காமல், சேவையாக அளிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அடிப்படை வருமானம் கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications