மோடி இல்லேன்னா விஜய்க்கு தடுப்பூசி கூட கிடைத்திருக்காது.. தாமரை இலையில் தண்ணி ஒட்டணுமா: தமிழிசை நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? எப்படி ஓட்டு போடுவார்கள்? என்று நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியிருந்தார்.. இதற்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி தந்துள்ளார்.. பிரதமர் மோடி மட்டும் இல்லையென்றால், விஜய்க்கு தடுப்பூசி கூட கிடைத்திருக்காது என்றும், தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டியது இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நேற்று நடந்தது.

Vijay BJP modi

அப்போது விஜய் பேசும்போது, "பாசிச பாஜவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க நாம என்ன உலக மகா ஊழல் கட்சியா? வெகுஜன மக்கள் படை நாம். அதனால அடிமை கூட்டணி நமக்கு எதுக்கு?

முரட்டு பிடிவாதம் - மனசு வலிக்குது

நம்ம கூட்டணி சுய மரியாதை கூட்டணியாக இருக்கும். நம்மை நம்பி வருவோருக்கு ஆட்சி, அதிகாரம் நிச்சயம் உண்டு. 2026ல் இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டியே. மத்திய பாஜக அரசு 3ம் முறையாக ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா?

தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டு கொடுங்கள். அது போதும். உங்களின் முரட்டு பிடிவாதத்தால் தான் நீட் தேர்வு நடக்கிறது என சொல்லவே மனசு வலிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான எதையும் செய்ய மாட்டீர்கள். மைனாரிட்டி ஆட்சி நடத்த உங்களுக்கு ஒரு கூட்டணி.

தண்ணியே ஒட்டாத தாமரை இலை

ஊழல் கட்சிகளை மிரட்டி 2029 வரை ஒரு பயணம் போயிடலாம் என நினைக்கிறீர்கள். தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? எப்படி ஓட்டு போடுவார்கள்? கீழடி ஆதாரத்தை மறைத்து எங்களது நாகரீகத்தையும், ஆதாரத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்காதீர்கள். மத நல்லிணக்கம் உள்ள மண் இது.

உங்களது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு மாஸ். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக் காப்பது? அந்த கட்சி இப்போது எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள். என்ன வேஷம் போட்டு பாஜக இங்க வந்தாலும் அவங்க வேலை ஆகாது" என்றெல்லாம் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்

இந்நிலையில், மறைந்த நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநர் இல.கணேசனுக்கு புகழ் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி தந்தார்.. அப்போது விஜய்யின் பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு தமிழிசை, "தமிழக வெற்றி கழக மாநாட்டை பொருத்தவரை அதை அரசியல் மாநாடாக பார்க்கவில்லை. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டமாகத்தான் பார்க்கிறேன்.

அவர் பேச்சில் முதிர்ச்சியற்ற தன்மையை பார்க்கிறேன். அவர் கொள்கை எதிரி பாஜக என்கிறார்.. ஆனால், அவர் கொள்கை எது என்று இதுவரை சொல்லவில்லை.. அதில் தெளிவும் இல்லை..

காங்கிரஸை ஏன் பேசல

கச்சதீவு பற்றி பேசுகிறார், தீவிரவாதத்தை எதிர்த்ததற்காக உலகமே பாராட்டுகிறது. ஒரு திராவிட கட்சியுடன் நேரடி கூட்டணியும் மற்றொரு திராவிட கட்சியுடன் மறைமுக கூட்டணியும் பாஜக வைத்திருக்கிறது என்று விஜய் பேசியது முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது.

கச்சத்தீவு பற்றி பேசுகிறீர்கள் ஏன் காங்கிரஸ் பற்றி பேசவில்லை என்று நாங்கள் கேட்கலாம் இல்லையா? கச்சத்தீவைப் பற்றி பேசிய விஜய் காங்கிரஸ் பற்றி பேச ஏன் மறுக்கிறார்?

விஜய்க்கு தடுப்பூசி கூட கிடைத்திருக்காது

படத்தை பார்த்த ஜோரில் எல்லோரும் பார்த்தார்கள், கைதட்டினார்கள். சொகுசு பயணத்தை பற்றி யார் பேசுவது? உலகம் முழுவதும் இந்த மக்களின் சோகப் பயணத்தில் பங்கெடுத்துக் கொண்டு துணை நின்று பெண்களின் சிந்தூரம் பாதிக்கப்படக்கூடாது என்று ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தி காட்டி, இந்த உலகத்தை மூன்றாவது பொருளாதாரம் நாடாக மாற்றிக் காட்டினார்.

பிரதமர் மோடி மட்டும் இல்லையென்றால், விஜய்க்கு தடுப்பூசி கூட கிடைத்திருக்காது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டியது இல்லை. தண்ணீரில் தாமரை மலரும். தம்பி விஜய் இன்னும் அரசியல் தலைவராக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தம்பி வாயை திறந்துட்டாரா

சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்..

இதுகுறித்து அப்போதே தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார்... "தவெக தலைவர் விஜய் வாயை திறந்துவிட்டாரா? பரவாயில்லை தம்பி வாயை திறந்து விட்டாரா? அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று எனக்கு தெரியவில்லை திடீரென்று யார் அவரை எழுப்பினார் என்றும் தெரியவில்லை. ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அன்றாடம் மக்களின் பிரச்சனை எவ்வளவு உள்ளது, தம்பி விஜய் அதை பார்த்தால் பரவாயில்லை. அரசியல் கட்சி தலைவராக இருந்து கொண்டு இதை பாருங்கள். நாம் சினிமாவில் எப்ப வேண்டுமானாலும் நடிக்கலாம். தினம் தினம் நாம் மக்கள் பிரச்சனை பற்றி பேச வேண்டும். ஆணவக்கொலை தூத்துக்குடியில் நடந்தது தம்பி அதற்கு வாய் திறந்தாரா?' என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+