ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒரு நாள் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில் மறுநாள் வீட்டில் இருந்து வருகிறார். நேற்று குமரியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் நாளை திருப்பூரில் பிரசாரம், ரோடு ஷோ மேற்கொள்கிறார். இதற்கு காவல்துறையினரும் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். நாளை திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துவார் என்றும், அவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இந்த சின்னத்துக்கு போடுங்கள் என வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாளை திருப்பூரில் விஜய் பிரசாரம்
இந்த முறை நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் முதல்முறை தேர்தலில் பங்கேற்கும் தவெகவினரும் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். விஜய்யை தங்கள் தொகுதிக்கு அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தால் இன்னும் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என தவெக வேட்பாளர்கள் கருதி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யோ ஒரு நாள் பிரசாரம் ஒரு நாள் ரெஸ்ட் என இருந்து வருகிறார்.
நேற்று கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் இன்று எங்கும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் நளை விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான அனுமதியும் காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் செய்வதற்காக அவரது கட்சி நிர்வாகிகள் அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தனர்.
ரோடு ஷோ மற்றும் பரப்புரை
திருப்பூர் மத்திய பஸ் நிலையம், பெருமாநல்லூர் நால்ரோடு, அவினாசி சாலை ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரோடு ஷோ மற்றும் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த போலீசார் திருப்பூரில் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளித்து உள்ளனர். இதன்படி நாளை மாலை 4 மணிக்கு திருப்பூர் பெருமாநல்லூர் நால் ரோட்டில் பிரசாரம் செய்வதற்கும், மாலை 6 மணிக்கு அவினாசி சாலையில் ரோடு ஷோ செல்லவும் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், தொழிலாளர்கள் பலரில் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதால் அங்கு கூட்டம் அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதற்கு ஏற்ப வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது விஜய் பனியன் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் நெசவு, பின்னலாடை தொழிலாளர்களுக்காக சிறப்பு தேர்தல் அறிவிப்புகளையும் அவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கை
ஏற்கனவே குமரியில் பிரசாரம் செய்யும் போது மீனவர்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு பேசியிருந்தார். திருப்பூர் பனியன் தொழில் நகரம் என்பதால் ஜவுளித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அனுமதி பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் அவ்வப்போது பயண திட்டங்களை மாற்றி அமைத்து வரும் விஜய் இதுவரை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, காரைக்குடி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்து இருக்கிறார்.
-
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்












Click it and Unblock the Notifications