விஜய் அரசியல் என்ட்ரி.. சாதிய கட்சிகளுக்கு வீழ்ச்சியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியின் வருகை தமிழக தேர்தல் அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக நிலவும் சாதிய மனோபாவத்தை உடைக்கும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.

விஜய்யின் அரசியல் என்ட்ரி தமிழக அரசியல் கட்சிகளிடையே நிலவும் சாதிய மனோபாவத்தைக் குறைத்திருக்கிறது என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்திய அரசியலில் சாதிய ஆதிக்கம் என்பது மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. பீகார், உத்திர பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சாதிய அரசியல் குறைவு என்றே சொல்லலாம்.

Vijay

அரசியல் செல்வாக்கு இல்லாத மாதிரி உள்ள சாதிய அமைப்புகள் தேர்தல் காலங்களில், கூட்டணி என்ற போர்வைக்குள் அதிகாரத்தைப் பெற்று விடுவதைக் காணமுடிகிறது. திமுகவின் ஆரம்பக் காலம் என்பது சாதி சார்ந்ததாக இருக்கவில்லை. அது ஒரு ஒடுக்கப்பட்ட, தொழிலாளர்களின் கூட்டமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. ஆயினும் கட்சித் தலைமைக்குள், மாவட்டத் தலைமைக்குள் அதிகாரம் மிக்க சாதியைச் சார்ந்தவரின் கை ஓங்கி இருந்தை மறுக்கலாகாது.

தேர்தல் அரசியலின் வரைபடம்?

எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது அது எந்தச் சாதிய அடையாளத்துடன் முன்வைக்கப்படவில்லை. அக்கட்சிக்கு வலிமையான சாதிய செல்வாக்கு கொண்ட இரண்டாம் தலைவர்கள் இருந்தனர். புகழ் வாய்ந்த நடிகராக இருந்த எம்ஜிஆர் தன் சினிமா செல்வாக்கைக் கொண்டு அரசியலில் நுழைந்தார். அவர் அண்ணாவின் தம்பிகளில் ஒருவராக மட்டும் இல்லை, அவர் சற்று கூடுதல் நெருக்கம் கொண்டவராகவே இருந்தார்.

அதிமுக அனைத்து சாதியின் பின்புலத்தையும் ஒருங்கே கொண்ட கட்சியாகவே செயல்பட்டது. பொதுவாக சினிமா என்று ஊடகம் தான் முதன்முதலாகச் சாதியை உடைக்கும் களமாக இருந்தது. கோயில்களில் சாதிய படிநிலை இருந்தது. வீடுகளில், வீதிகளில் சாதிய படிநிலை இருந்தது. ஊர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தள்ளி வைக்கும் நடைமுறை இருந்தது. ஆனால், சினிமா கொட்டகை என்னும் போது அதில், அனைத்து சாதியினரும் வாங்கும் டிக்கெட்டை வைத்து மட்டுமே மதிப்பிட்டு, இருக்கைகளில் அமர்த்தப்பட்டனர்.

ஆக, தமிழ்ப் பண்பாட்டில் சாதிய படிநிலையை உடைக்கும் இடமாகத் திரையரங்கமும், சினிமாவும் இருந்துள்ளது. சினிமா தயாரிப்பில் கூட பல மொழி, பல சாதியைச் சார்ந்தவர்கள் கூட்டாகச் சேர்ந்தே ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். அதன் மற்றொரு வரவாக அதிமுகவை எம்ஜிஆர் நரிக்குறவர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள் என அடிமட்டத்திலிருந்த மக்கள் மத்தியில் தன் கட்சியை வலிமையாகக் கொண்டுபோய் சேர்த்தார்.
இந்திய விடுதலைக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சி செல்வந்தர்களின் அல்லது பண்ணையார்களின் கட்சியாகவே கருதப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி இந்தச் சாதிமுறையை உடைத்தது. அப்படி இருந்தும் அக்கட்சி கோவில்பட்டி போன்ற சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கட்சியாகவே அடையாளம் காணப்பட்டது. அதற்காகக் கம்யூனிஸ்ட் இடதுசாரி இயக்கத்தைச் சாதிய கட்சிகளுடன் ஒப்பிடமுடியாது. கூடாது. தேர்தல் அரசியலில் அப்பட்டமான சாதிய கூட்டணியை அமைத்தவர் மு.கருணாநிதி என்பது பலரது குற்றச்சாட்டு.

2001 அவர் பல சாதிய அமைப்புகளை அரசியல் கட்சியாகச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். கு.ப. கிருஷ்ணன், கண்ணப்பன் போன்றோரின் கட்சிகள் சாதிய கட்சியாகவே கருதப்பட்டன. "சாதி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் சாதியை ஆதரிப்பதாக அர்த்தம் கிடையாது" என்றார் கருணாநிதி.

பலம் இழக்குமா சாதி கட்சிகள்?

பாமக சாதிய கட்சியில்லை என்று சொன்னாலும் அது வடமாநிலங்களில் சாதிய கட்சியாகவே உள்ளது. அதேபோன்று விசிக. இப்போதுகூட திமுக கூட்டணியில் சாதிய அமைப்புகளுக்கு ஸ்டாலின் சில தொகுதிகளைக் கொடுத்துள்ளார். கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் என சில கட்சிகளை அடையாளம் காண முடியும்.

அதிமுகவில் புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் உள்ளன. இவை தவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் தென் மாவட்டங்களில் சாதிய கட்சியாகவே செயல்படுகிறது. அதற்குப் பொது அடையாளம் இல்லை. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக குறிப்பிட்ட சாதிக்கான கட்சி எனச் சொல்லமுடியாது. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அதிமுகவில், ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் குடும்பத்தின் ஆதிக்கம் இருந்தது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இருந்தாலும் அதைச் சாதிய கட்சியாக மக்கள் கருதவில்லை.

பாமக, விசிக, புதிய தமிழகம் எனப் பல சாதிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள தமிழ்நாட்டில்தான் எந்த சாதிய அடையாளமும் இல்லாமல் சீமானின் நாம் தமிழர் கட்சி இயங்கிவருகிறது. 'தமிழர்' என்ற பொது அடையாளத்தை இக்கட்சி கோருகிறது. இவருக்கு முன்னதாக விஜயகாந்த்தின் தேமுதிக சாதிய அடையாளம் உள்ள கட்சியாக இல்லை. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியதில் சாதிய ஆதிக்கம் உள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக மொழி ரீதியாக அந்த முரண் முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் விஜயகாந்த்திற்குப் பின் ஒரு பொது அடையாளத்தை முன்வைக்கும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் சார்ந்துள்ள சாதியின் மிகப் பெரும்பான்மை கொண்டதல்ல. அவர் அதை உணர்ந்தே ஒரு பொது அடையாளத்திற்குள் நிற்கிறார். அனைவரின் வீட்டுப் பிள்ளையாகத் தன்னை முன்வைக்கிறார். அது மதத்தை மீறிய அடையாளமாகவும் உள்ளது.

ஆயினும் கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகன்நாத் மிஸ்ரா போன்ற சாதி அடையாளம் கொண்டவர்களுக்கும் விஜய் சீட்டுக் கொடுத்துள்ளார் என்ற புகார் ஒருபக்கம் ஓங்கி ஒலிக்கவே செய்கிறது. சில மாவட்டங்களில் வழங்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பு கூட சாதி பார்த்து வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

தவெக மேல்மட்டத்தில் பல சாதியினர் பல பொறுப்புகளில் உள்ளனர். ஒருவகையில் விஜய்யின் வருகை சாதி ரீதியான ஒன்று திரட்டலுக்குச் சவாலாக அமைந்துள்ளது எனலாம். பல சாதியைச் சார்ந்த இளைஞர்களின் பொது அடையாளமாக தவெக உள்ளது. உட்கட்சிக்குள் சில பூசல்கள் இருக்கலாம். ஒட்டுமொத்தமாக தவெக சாதிய அரசியல் கட்சிகளைப் பதம் பார்க்கும் சக்தியாகவே உருவெடுத்துள்ளது.

-கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+