கம்பீர தோற்றம், குழந்தை சிரிப்புடன் செல்பியில் விஜயகாந்த் மாஸ்.. தெறிக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 69-ஆவது பிறந்தநாளையொட்டி இன்று தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மனைவி, இரு மகன்களுடன் சிங்கம் போல் அதே குழந்தை சிரிப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
Recommended Video
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு விஜயகாந்தின் உடல்நிலை சற்று தேறியுள்ளதாகவே தெரிகிறது. விஜயகாந்தின் 69ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்தின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக தொண்டர்களால் கொண்டாடப்படும். விஜயகாந்தும் தனது பிறந்தநாளன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பார்.

சிகிச்சை
அண்மைகாலமாக அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்காததால் அவரால் பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்தார்.

பிரச்சினை
மேலும் விஜயகாந்தின் குரலில் இருக்கும் பிரச்சினையும் சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் சிங்கம் போல் கர்ஜிப்பார் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்திருந்தார். இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக, திமுக
விஜயகாந்த் பூரண நலம் பெற்று வருவது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை உயர்த்தும் என தொண்டர்கள் நம்புகிறார்கள். இந்த நிலையில் இன்று விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களுடன் செல்பி எடுத்து கொண்டாடியுள்ளார்.

புத்துணர்ச்சி
இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் மிகவும் புத்துணர்ச்சியுடன், கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஆனால் அதே குழந்தை சிரிப்புடன்!.. அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு விஜயகாந்தும் நன்றி தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications