ஆச்சி மனோரமா வீட்டில் திருட்டு.. சினிமாவில் மட்டுமில்லை நிஜத்திலும் திருடர்களை பந்தாடிய விஜயகாந்த்
சென்னை: நடிகை மனோரமா வீட்டுக்கு அருகே ஒரு பெண்ணின் நகையை திருடிக் கொண்டு தப்பியோடியவர்களை கேப்டன் விஜயகாந்த் விரட்டி பிடித்த சம்பவத்தை நடிகர் தியாகு நினைவுகூர்ந்துள்ளார்.
மதுரையில் ரைஸ் மில் ஓனரின் மகனான விஜயகாந்திற்கு நிறைய ஏக்கர் நிலங்கள், ரைஸ் மில்கள் உள்ளன. ஆனாலும் தந்தை சம்பாதியத்தை நம்பாமல் தனது திறமையை நிரூபிக்க சென்னைக்கு வந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் வந்த அவர் அரிசி மில் ஓனர் மகனாக இருந்த போதிலும் அரை வயிற்று கஞ்சிக்கு கூட கஷ்டப்பட்டார்.

எந்த சூழலிலும் தனது தந்தையிடம் பணம் கேட்டதில்லை. ஒரு சில சினிமா கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி செல்லும் போது காத்திருக்க சொல்வார்களாம். அப்போது மதிய உணவு இடைவேளை வந்துவிட்டால் இவருக்கு பசி எடுக்குமாம். ஆனால் அங்கிருந்து நிறுவனத்தினர் இவரை அழைக்காமல் அவர்கள் மட்டும் சாப்பிடுவார்களாம்.
எப்படியோ ஒரு கட்டத்தில் ரஜினி , கமல் உச்சத்தில் இருந்த போதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அப்போது சிறிது சம்பாதித்தவுடன் தனது அலுவலகத்திற்கு யார் வந்தாலும் அவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பும் பழக்கமே இன்று வரை விஜயகாந்திற்கு இல்லை. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் நல்லது செய்வாராம். இவரால் பயனடைந்தவர்கள் ஏராளம்.
இவர் காவல் துறை அதிகாரி வேடங்களில் நிறைய படங்களில் நடித்து பலரும் போலீஸாக இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். படங்களில் அவரது பாடி லேங்குவேஜ், கண்கள், வசனங்கள் எல்லாமே அனல் பறக்கும். பயங்கரவாதிகளையும், கொலை, கொள்ளை செய்தவர்களையும் சினிமாவில் விரட்டி விரட்டி பிடிப்பார்.
அது போல் விஜயகாந்த் நிஜ வாழ்வில் ஹீரோவாக இருந்திருக்கிறாராம். யாருக்கு எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே தலையிட்டு சரி செய்வாராம். விஜயகாந்த் படம் என்றால் நடிகைகளிடம் யாரும் வாலாட்ட முடியாதாம். அதனால் அவரை பாதுகாவலனாகவே நடிகைகள் நினைப்பார்களாம். மேலும் அவருடன் எந்த பயமும் இன்றி வெளிநாட்டிற்கு கூட தனியாக சென்று நடிப்பார்களாம்.

அரசியலுக்கு வந்த விஜயகாந்த் அதிலும் அதிரடிகளை காட்டினார். சில ஆண்டுகள் வரை அரசியலில் ஆக்டிவ்வாக இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது தைரியம் குறித்து நடிகர் தியாகு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் ஒரு நாள் நடிகை மனோரமாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் விஜயகாந்த் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கடைக்கு போய்விட்டு காய்கறிகளை வாங்கிக் கொண்டு மனோரமா வீட்டு பணிப்பெண் வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தாராம். அப்போது யாரோ மர்மநபர் அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினாராம். உடனே தான் ஸ்டன்டில் கற்று வைத்த வித்தைகளை இறக்கினாராம். அந்த திருடனை துரத்தி கொண்டு போய் பிடித்து நடுரோட்டில் வைத்து நய்யபுடைத்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த செயினை வாங்கி பணிப்பெண்ணிடம் கொடுத்தாராம். இப்படி எங்கு தப்பு நடந்தாலும் தட்டி கேட்பது விஜியின் (விஜயகாந்தின் செல்லப்பெயர்) குணம் என தியாகு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications