விஜயகாந்த்துக்கு வந்த ஆவேசம்.. "தெருவில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம்".. முக்கிய கோரிக்கை என்ன?
சென்னை: மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதைத்தவிர, நெய்வேலிக்கு பக்கத்தில் இன்னொரு சுரங்கத்தை அமைக்க முடிவாகி உள்ளது.. அதாவது, வருடத்துக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3556 கோடி செலவில் அமைக்க என்எல்சி இந்தியா நிர்வாக குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

நிலக்கரி சுரங்கம்
இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்எல்சி கையகப்படுத்த போவதாக தெரிகிறது.. இந்த 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பாலான பகுதி, காவிரி படுகையை ஒட்டியே அமைய போவதாகவும் சொல்கிறார்கள்.. இதைத்தவிர, 4வதாக, வீராணம் நிலக்கரித் திட்டம், 6வதாக, பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், 7வதாக, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், 8வதாக, தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், 9வதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.. இவைகளில், ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடும்..

அச்சம் கவலை
அதிலும், இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதனால்தான், விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாது என்றம் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.. ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்..

மண்ணுக்கடியில் வைரம்
ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.. இதுகுறித்து, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, "மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்..

கேப்டன் விஜயகாந்த்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படியே, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தும் முக்கிய கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்..

விஜயகாந்த்
அதில், "நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும்.. நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை முடியாது. எனவே, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாமக + தேமுதிக
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு குறித்து திமுக எம்எல்ஏ, டிஆர்பி ராஜா, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.. மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று டிஆர்பி.ராஜா பேசினார். அதேபோல, அதிமுக, காங்கிரஸ், பா.ம.க உறுப்பினர்களும் நிலக்கரி சுரங்கம் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications