Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்துக்காக தோப்புக்கரணம் போடறேன், சீக்கிரமா வீட்டுக்கு வரணும் சாமி: உருகிய செங்கல்பட்டு சிறுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த், பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரார்த்தனை செய்யப்பட்டு வரும்நிலையில், ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளாகவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது.. இந்நிலையில், கடந்த 18ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு காரணமாக, சென்னையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.

Vijayakanth Health Condition and Chengalpattu Girl prays the god for DMDK Leader Vijayakanth

நுரையீரல்: அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. "விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்" என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் தரப்படுகிறது என்றும், டிரக்கியாஸ்டமி சிகிச்சை தரப்படுகிறது என்றும் மாறி மாறி தகவல்கள் வருகின்றன.. ஆனாலும் எந்த மாதிரியான சிகிச்சை அவருக்கு தரப்படுகிறது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை.

வதந்திகள்: இதனிடையே, விஜயகாந்த் உடல் நிலை குறித்து வதந்திகள் வந்தபடியே இருந்ததால், அவரது மனைவி பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"நான் கேப்டன் கூடவே இருந்து வருகிறேன். மருத்துவமனையில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இந்த பரபரப்பும் வதந்தியும் வெளியில்தான் உலாவிக்கொண்டு இருக்கிறது. மனிதநேயத்தோடு வதந்திகளை யார் பரப்பினாலும் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். கேப்டன் நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் நல்ல செய்தி வரும்" என்று கூறியிருந்தார்.

எனினும், விஜயகாந்த்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, தேமுதிக ரசிகர்களும் தொண்டர்களும் மட்டுமல்லாமல், தமிழக மக்களே வேதனை அடைந்தனர்.. இதையடுத்து, விஜயகாந்த் உடல்நல பெற வேண்டும் என்று, பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள்..

உருக்கம்: இந்நிலையில், ஒரு சிறுமியின் பிரார்த்தனை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் இந்த சிறுமி.. இவர் தன்னுடைய வீட்டில் விநாயகர் முன்பு நின்று, கைகளை கூப்பி, "விஜயகாந்த் கேப்டன், சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும்.. அவர் உடல் நலமுடன் வந்தால் உனக்கு பத்து தோப்புகரணம் போடுகிறேன்" என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

சிறுமி பிரார்த்தனை செய்வதை, அவரது பெற்றோர்கள் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்களும், கேப்டன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+