65 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை காலி செய்ய சொல்வது நியாயமா? - துறைமுகம் மக்களுக்காக இறங்கிய விஜயகாந்த்
சென்னை : சென்னை துறைமுகம் தொகுதி இந்திரா காந்தி நகரில் 65 ஆண்டுக்கு மேல் வசித்து வரும் 3,000 குடும்பங்களை எவ்வித முன்னறிவிப்பின்றி காலி செய்யச் சொல்வது நியாயமா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் உள்ளடங்கிய காந்தி நகர், இந்திரா காந்தி நகரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வாழ்கின்ற பகுதி மத்திய பாதுகாப்பு துறைக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் சொந்தமானதாகும்.

எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த 10.05.2023, 17.05.2023 மற்றும் 22.05.2023 ஆகிய தேதிகளில் ராணுவத்துறை மூலம் தனித்தனியாக அனைவருக்கும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் இந்த இடம் பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது எனவும் உடனடியாக காலி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 65 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை திடீரென காலி செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட இடத்தை நிலமாற்றம் செய்து அங்கேயே வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications