டூப்புக்கு மட்டும் 2 உசுரா இருக்கு? ஒன்னுதானே.. அந்த ரிஸ்க்கை நானே எடுக்குறேன்.. விஜயகாந்தின் மனிதம்
சென்னை: சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போட விஜயகாந்த் ஒப்புக் கொள்ளவே மாட்டாராம்.
விஜயகாந்த் என்றாலே அவருடைய கொடை வள்ளல் என்பதை தாண்டி அவரது மிடுக்கான தோற்றம், கர்ஜனை பேச்சு, சண்டை காட்சிகள் தான் நினைவுக்கு வரும். 10 ஆம் வகுப்பு வரை படித்திருந்த விஜயகாந்த் ஆங்கில் படங்களை விரும்பி பார்ப்பாராம்.

அதிலும் அவர் ஆக்ஷன் படங்களையே பார்ப்பாராம். திருமணத்திற்கு பிறகு மனைவி பிரேமலதாவுடன் அவர் ஆக்ஷன் படங்களை பார்ப்பதுண்டு. அப்போது அதில் வரும் டயலாக்குகளுக்கு பிரேமலதாவிடம் கேட்டு அர்த்தம் தெரிந்து கொள்வாராம்.
அத்துடன் அதில் வரும் புதிய புதிய சண்டை காட்சிகளை குறித்து வைத்துக் கொண்டு தனது படத்திற்கும் அது போல் வேண்டும் என ஸ்டண்ட் கலைஞரிடம் தெரிவித்தாராம். அது போல் சண்டை காட்சிகளை சண்டை பயிற்சி மாஸ்டர்களும் வைப்பார்கள். ஆனால் எந்த சண்டை காட்சியாக இருந்தாலும் அதில் டூப் வேண்டாம் என கூறி தானே நடிப்பார்.
அவருடைய சண்டை காட்சிகளில் தனி ஸ்டைலும் இருந்தது. டூப் வேண்டாம் என அவர் ஏன் சொன்னார் என்பதன் பின்னணியில் ஒரு காரணமும் உள்ளது. அதாவது நாளை உனது நாள் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஒரு சண்டைகாட்சியில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு டூப் போட்ட நபர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் அது முதல் இனிமேல் எனக்கான சண்டைக் காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாம் என முடிவெடுத்தார். இதற்காக அவர் பிரத்யேக சண்டை பயிற்சியையும் எடுத்துள்ளார். ஒரு படத்தில் நடித்த போது அந்த சண்டை காட்சி மிகவும் ரிஸ்க்கானதாக இருந்ததாம். அதனால் டூப் போடலாம் என இயக்குநர் கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் விஜயகாந்தோ ஏன் சார் டூப்புக்கு ரெண்டு உசுரா இருக்கு, அவருக்கு ஒரு உசுருதானே. அது போறதா இருந்தால் என்னோடு போகட்டும், நானே ரிஸ்க் எடுக்கிறேன் என தெரிவித்தாராம். இது போன்ற மனித நேயம் யாருக்கு வரும்? நிஜமாகவே விஜயகாந்த் கருப்பு வைரம்தான்.
அது போல் செந்தூரபாண்டி படத்தில் ராம்கியுடன் நடித்த போது ஒரு சண்டை காட்சியில் விஜயகாந்தின் தோள் பட்டை எலும்பில் இறக்கம் ஏற்பட்டு உயிர் போகும் அளவுக்கு வலிக்குமாம். ஆனால் ஷூட்டிங்கை கேன்சல் செய்யாமல் அவரே ஒரு இடத்திற்கு சென்று வலிகளை பொறுத்துக் கொண்டு தோள் பட்டையை ஏற்றிக் கொண்டு அடுத்த நிமிடமே ஷாட் ரெடியா போகலாமா என கேட்பாராம். தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய கூடாது, டெக்னீஷியன்களின் பிழைப்பு தன்னால் கெட்டு விடக் கூடாது என்பதிலும் அவர் அக்கறை கொண்டவராக இருப்பார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications