Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் மகன் To அப்பாவு மகன் வரை! எம்.பி. தேர்தலில் வாரிசுகள் ராஜ்ஜியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 2024 மக்களைவை தேர்தலில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் பலர் களம் காண உள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தல் களம் கிட்டத்தட்ட வாரிசுகளின் ஆதிக்கத்தால் நிரம்பி வழியப் போகிறது என்றே தோன்றுகிறது.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

பொதுவாக திமுகவில்தான் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள். ஆனால், அதற்குக் கொஞ்சம் கூட குறைந்தவர்கள் அல்ல அதிமுகவினர் என்பது இந்தத் தேர்தலில் நிரூபணமாகப் போகிறது.

அதிமுகவில் இந்த முறை அதிக வாரிசுகளுக்கு எம்.பி.சீட் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் இருக்கிறார். ஒபிஎஸ் மகன் இரவீந்திரநாத் குமார் இருக்கிறார். மேலும் சிலர் உள்ளனர்.

இவர்கள் எப்போதும் திமுகவை வாரிசு கட்சி என்பார்கள். அதே அதிமுகவிற்குள் நடந்தால் அது வாரிசு அரசியல் இல்லை என்பார்கள். அப்படித்தான் ஜெயக்குமார் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

அதாவது எம்பி சீட்டுக்கான ஏ படிவம், பி படிவத்தில் ஜெயக்குமார் கையெழுத்து இடவில்லையாம். தனது மகன் ஜெயவர்த்தன் படிவத்தில் ஜெயலலிதா தான் கையெழுத்துப் போட்டாராம். ஆகவே அது வாரிசு அரசியல் இல்லையாம்.

ஒபிஎஸ் தனது மகன் இரவீந்திரநாத் குமார் ஏ ஃபார்ம் மற்றும் பி ஃபார்ம் ஆகிய இரண்டு படிவங்களிலும் கட்சியின் சார்பாக அன்றைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்தான் கையெழுத்துப் போட்டாராம். அதுதான் வாரிசு அரசியலாம்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

ஸ்டாலின் படிவத்தில் மு.கருணாநிதி கையெழுத்துப் போடுவதும் உதயநிதி படிவத்தில் ஸ்டாலின் கையெழுத்துப் போட்டு சீட்டு கொடுப்பதும்தான் வாரிசு அரசியல் என்று நீண்ட விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அவர் மு.கருணாநிதி குடும்பத்தை மட்டுமே சொல்லி இருந்தார். ஆனால், அதிமுகவில் சசிகலாவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து இருந்தது. டிடிவி தினகரன் தொடங்கி சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலர் எம்.பி. பதவியில் நின்றுள்ளனர். அதை ஜெயக்குமார் மறந்துவிட்டார்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

பெரிய கட்சிகள்தான் இப்படி என்றால், மக்கள் செல்வாக்கே இல்லாத ஐஜேகே, புதிய நீதிக் கட்சிகளில் கூட வாரிசு அரசியல்தான் நடந்து வருகிறது.

அப்படிப் பார்த்தால் 2024 மக்களவைத் தேர்தல் களம் வாரிசுகளின் வேட்டை நிலமாக இருக்கப் போகிறது என்பது உறுதி.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியைத் தென்காசி தொகுதியில் எம்.பி. ஆக நிறுத்த திட்டமிட்டுள்ளார். எப்படியாவது இந்த முறை தனது மகனை எம்.பி. ஆக்கி அழகு பார்த்துவிட வேண்டும் என்றும் அடுத்த கட்டமாகக் கட்சியை அவர் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.

அவரது மகன் ஷியாம் ஒரு மருத்துவர். எப்படி பாமகவை டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி கையில் ஒப்படைத்தாரோ அப்படி தானும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

இவரைப் போலவே இந்தத் தேர்தலில் தனது மகள் வினோலினியை எம்.பி. ஆக்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.

சமீபத்தில் நடந்த கட்சியின் உயர்மட்டக் குழுவில் கலந்துகொண்ட அவரது மகள் வினோலினி, தான் எம்.பி. ஆகி நாடாளுமன்றத்திற்குச் செல்வதே என் ஆசை என்று வெளிப்படையாக அப்பா முன்னாலேயே கூறியிருக்கிறார்.

மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை இந்தத் தேர்தலில் நிறுத்த அவரது தாயார் முடிவு செய்துள்ளார். மதுரை தொகுதியில் மகனைக் களம் இறக்குவதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

விஜயகாந்த் மறைவை ஒட்டி அந்த அனுதாப அலையை வைத்து வென்றுவிடலாம் எனக் கட்சியினர் சொன்னார்களா? இல்லையா என்று தெரியவில்லை. தேமுதிக பிரேமலதாவே அதைக் கட்சியினருக்குக் கட்டளையாகப் பிறப்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆகவே, விஜய பிரபாகரன் மதுரை மக்களை மனதில் நினைத்தபடி கனவு கண்டு இருக்கிறார்.

அதைவிட இந்த முறை திமுக தரப்பிலிருந்து பல வாரிசுகள் வேட்பாளர்களாகக் களம் இறங்க உள்ளனர். காரணம், உதயநிதியைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்றால் சீரியர் வாயை அடைக்க வேண்டும். அதற்காகவே பல இளம் வாரிசுகளுக்கு சீட் கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண். சில ஆண்டுகள் முன்னதாகவே திருச்சி வட்டாரத்தில் அவரது மகன் அரசியல் வருகையை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

அப்போதே பெரம்பலூர் க மக்களவைத் தொகுதியைக் குறிவைத்து விட்டார் என்கிறார்கள். ஆக அவருக்குச் சீட்டு கிடைப்பது கன்ஃபார்ம் என்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

அப்போது கடலூர் மக்களவைத் தொகுதியைக் குறித்து வைத்துவிட்டார் பன்னீர்செல்வம். அங்கே அவரது சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஆகவே, வெற்றியும் எளிது. கூடவே 3ஆவது தலைமுறை சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பையும் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்று கட்சித் தலைமை நினைக்கிறதாம்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

அடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு. இவரது மகன் எ.வ.வே. கம்பன். இவர் திருவண்ணாமலை தொகுதியைப் பேசி வாங்கிவிட்டார் என்றும் கூட்டணி பேசும் போதே கூட்டணிக் கட்சிகளிடம் அந்தத் தொகுதியைக் கேட்காதீர்கள் என்று திட்டவட்டமாக திமுக குழு குறிப்பிட்டுச் சொல்லி வருவதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது.

அதன்பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். அவரது மகன் பெயர் திலிப் கண்ணப்பன். சிவகங்கை அல்லது ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதிகளில் ஏதேனும் ஒரு கனியைப் பறித்துவிடலாம் எனத் தைரியமாக இருக்கிறாராம் இவர்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

இவரைப் போலவே அமைச்சர் ஐ பெரியசாமி தனது மகன் செந்தில்குமாருக்குத் திண்டுக்கல் தொகுதியைக் கேட்கிறார் என்கிறார்கள். இவரது மகன் பழனி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் எம்.பி.சீட் கேட்கிறார் எனக் கட்சியினர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எல்லாம் மேல் ஒருவர் இருக்கிறார். இன்றைய தேதியில் அவர்தான் தமிழ்நாட்டின் ஸ்டார். ஆளுநரை அடக்கி ஆண்ட அப்பாவுதான் அவர். ஆம்! சபாநாயகர் அப்பாவு அவரது மகன் அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி தொகுதியைக் கேட்டுப் பெறவேண்டும் என்பது உறுதி குலையாமல் இருக்கிறார்.

Vijayakanth son to speaker Appavu son! Sons are contest in 2024 lok sabha election

கடைசியாக வீரபாண்டி ஆறுமுகம் பேத்தி டாக்டர் மலர்விழி. இவர் சேலம் தொகுதியைக் கேட்கிறார் என்கிறார்கள். இவருக்கு சீட் கொடுத்தால் அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி உதயமாகிவிடுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+