சென்னையில் ஆச்சரியம்.. "பிரேமா, நான் எங்கியும் போகல".. விஜயகாந்த் குரலை கேட்டதுமே.. உறைந்த பிரேமலதா
சென்னை: சாமியாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை தேமுதிகவினர் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.. பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழையில் விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்..
அஞ்சலி: அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள்.
அதேபோல, விஜயகாந்த் மறைவையடுத்து, சில ஆச்சரிய சம்பவங்களும் நடந்தபடியே உள்ளன.. விஜயகாந்த் உடலை நல்லடக்கம் செய்ய கொண்டுசென்றபோதே, அவரது பூத உடலை கருடன் ஒன்று வட்டமடித்து கொண்டேயிருந்தது.. இந்த காட்சி அப்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
அதேபோல, நடிகர் விஜயகாந்த் ஆசையாய் வெள்ளை கிளி ஒன்று வளர்த்து வந்தார்.. இந்த கிளி அவரை, "கேப்டன்.. கேப்டன்.." என்று வாய் நிறைய கூப்பிடுமாம். அதனால், அதற்கு கேப்டன் என்றே பெயர் வைத்து விட்டார்கள்..
2 நாட்களுக்கு முன்பு, வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் உருவப்படத்தையே, அந்த வெள்ளை கிளி சுற்றி சுற்றி வந்ததாம். பிறகு, திடீரென படத்தின் முன்பு உட்கார்ந்தது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
பண்டிகை: இந்நிலையில், சாமியார் ஒருவர், விஜயகாந்த்தை போலவே அருள் வந்து பேசியது, பிரேமலதாவை நெகிழ செய்துவிட்டது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சாமியார் வந்திருந்தார்.. பிரேமலதாவிடம் சென்ற அந்த சாமியார், விஜயகாந்த் பற்றி பேச ஆரம்பித்தார்.. அவர் பேசிய ஒவ்வொரு வரிகளையும் கேட்டு, நெகிழ்ந்து போனார் பிரேமலதா.
"கேப்டன் எங்கும் போகவில்லை.. உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்.. காசி விஸ்வநாதர் என் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி சொன்னார்.. அதனால்தான், இங்கு நான் வந்தேன்.. கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்" என்றார்..
பிரேமா: சாமியார் இப்படி பேசிக்கொண்டேயிருந்தபோது, திடீரென அருள் வந்தது போல், விஜயகாந்த் குரலிலேயே பேசினார்.. "என்னை பத்தி உனக்கு தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்கே போகப்போறேன்? பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன்" என்று விஜயகாந்த் குரலில் சாமியார் பேச ஆரம்பித்ததும் பிரேமலதா கண்கலங்கி விட்டார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications