விஜயலட்சுமி வர்றாங்க.. "திமுக காரணம்" என கொதித்து கோர்ட்டுக்கு ஓடின சீமான்.. இன்றே வருகிறது தீர்ப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமியை இன்று ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி புகார் தந்திருந்தார்.. வளசரவாக்கம் போலீசில் தரப்பட்டிருந்த இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைகள்: அந்த மனுவில், "கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் தந்திருந்தார்.. அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில், இப்போது அந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல்துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 வருடங்களுக்கு பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. அதனால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்குகள்: இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் போலீசுக்கு உத்தரவிட்டது. மேலும், 2011-ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதை படித்து பார்த்த நீதிபதி, "இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று புகார்தாரர் விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்" என்று உத்தரவிட்டார்.
இன்று ஆஜர்: இதையடுத்து சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 29 (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, வழக்கின் தன்மை குறித்து ஆராய இன்று நடிகை விஜயலட்சுமிக்கு கோர்ட்டுக்கு வருவார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications