அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம்
சென்னை: ''நான் சர்வீசில் ஜெயித்துவிட்டேன். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன். மாற்றம் வரும் என்று தான் திமுகவில் சேர்ந்தேன்.. ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்துள்ளது'' என திமுகவில் இருந்து இன்று விலகிய விஜயின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் கூறியுள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். விஜயின் 'சுறா', 'வில்லு' 'போக்கிரி' ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் விஜயின் 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் விஜயிடம் இருந்து விலகிய பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பிறகு கலப்பை மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்டி கொடுத்தார்.
திமுகவில் இருந்து விலகல்
இதற்கிடையே தான் கடந்த டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார். திமுகவில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதற்கிடையே தான் அவர் திமுகவில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பிடி செல்வக்குமார் திமுக மீது கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிடி செல்வக்குமார் பேட்டி
இந்நிலையில் தான் திமுகவில் இருந்து விலகியது ஏன்? என்பது பற்றி விஜயின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக பிடி செல்வக்குமார் கூறியதாவது:
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்
"கன்னியாகுமரி தொகுதி என்னுடைய தொகுதி. நான் பிறந்து வளர்ந்து, பள்ளி, கல்லூரி எல்லாம் இங்கு தான் படித்தேன். இந்த தொகுதியில் எனக்கு யார் சப்போர்ட் செய்றாங்களோ அந்த கட்சிக்கு நான் ஆதரவு வழங்க உள்ளேன். ரவடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்வோருக்கு என் ஆதரவு இருக்காது. என்னுடைய ஆதரவை 3 முதல் 4 பேர் கேட்டுள்ளனர். தேசிய கட்சிகளிடம் இருந்து கூட எனக்கு போன் வருகிறது. நான் இங்கே தான் தோற்றுப்போயிட்டேன்.
மற்ற எல்லா கட்சிகளும் எனக்கு போன் செய்து சப்போர்ட் கேட்குறாங்க.. நான் சர்வீசில் ஜெயித்துவிட்டேன். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன். யார் யாரெல்லாமோ ஒரு சீட் வாங்கிட்டாங்க.. நேற்று வந்த ஓபிஎஸ் எங்கே இருந்தவர்? அதிமுகவில் முதல்வராக இருந்தவருக்கு திமுகவில் வந்தவுடன் ஒரு சீட் கிடைக்கிறது. நான் கன்னியாகுமரியில் மண்ணோடு மண்ணாக நின்று 12 ஆண்டுகளாக சேவை செய்துள்ளேன். என் சேவைக்கு அங்கீகாரம் கொடுக்கும் படியாக யாராவது வந்தால் அவர்களுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் ஆதரவு கொடுப்பேன்.
முதல்வர் சொன்னது என்ன?
இதையடுத்து, "திமுகவில் சீட் தருவதாக உங்களுக்கு வாக்குறுதி தரப்பட்டதா? என்ற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பிடி செல்வகுமார், ''கன்னியாகுமரி தொகுதியில் யார் சிறப்பானவர்கள்.. செல்வாக்கு உள்ளவர்களுக்கு தான் சீட் என்று முதல்வர் பேசியிருக்கிறார். நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் சர்வீசிஸில் சிறந்தவர் என்று என் பெயர் உளவுத்துறை ரிப்போர்ட்டில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. மனவேதனை எப்படி இருக்கும்?.
நான் பத்திரிகையாளராக இருந்து வந்தவன். பிஆர்ஓவாகவும் இருந்துள்ளேன். விஜய்க்கு 27 ஆண்டுகளாக கட்டமைப்புகளை உருவாக்கிய போராளியாக இருந்தவன். நான் இருக்கும்போது விஜய் நற்பெயரில் இருந்தார். நம்பர் ஒன் -இடத்துக்கு கொண்டு வந்துதான் இங்கே நிற்கிறேன். என் உழைப்பை யார் பயன்படுத்துவது? என் ஆதங்கம் நியாயமாக இருந்தால் நியாயம் என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்'' என்றார்.
திமுக மீது குற்றச்சாட்டு
அதன்பிறகு பத்திரிகையாளர் ஒருவர், ''திமுகவில் எந்த அடிப்படையில் சீட் கொடுக்கப்படுகிறது?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிடி செல்வக்குமார், ''வாரிசுகள், பணபலம் படைத்தவர்கள்.குவாரி வைத்திருப்போர், கட்ட பஞ்சாயத்து வைத்திருப்போர் உள்ளிட்டடோருக்கு தான் சீட் வழங்கப்படுகிறது. குறையாகவே சொல்வதாக நினைக்க வேண்டாம்.
சகாயம் சொன்னது தான் நியாயமாக இருக்கிறது. படித்தவர்கள், பண்பாளர்களை இந்த சமுதாயத்துக்குள் வர விடமாட்டார்கள் என்று அவர் கூறினார். புதிதாக வாங்க வாங்க என்று சொல்கிறார்கள். மாணவர்கள் வாங்க.. இளைஞர்களே வாங்க.. என்று சொல்கிறார்கள். சீட் கொடுப்பீர்களா?.
மாற்றம் வரும் என்று தான் திமுகவில் சேர்ந்தேன். பொதுவுடைமையான ஆட்கள், நல்ல செல்வாக்கு உள்ளவர்கள், மக்களிடம் நல்ல தொடர்பில் உள்ளவர்களுக்கு தான் சீட் கொடுப்போம் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் தான் வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று. ஏனென்றால் அவர் (முதல்வர் ஸ்டாலின்) என்னை அன்போடு பார்த்து கொண்டார்கள். ஆனால் அரசியல் சீட் எனும் சதுரங்க விளையாட்டில் நல்லவர்கள், புதியவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் '' என தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்











Click it and Unblock the Notifications