பிக் பாஸில் வெடித்த "தமிழ்நாடு" விவகாரம்.. சூப்பர் விளக்கம் சொன்ன விக்ரமன்.. சர்க்கரை கொடுத்த டிடி!
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாடு விவகாரம் அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலும் தமிழ்நாடு விவகாரம் வெடித்துள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தின் போது விக்ரமன் - டிடி இடையிலான பேச்சுவார்த்தையில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரே சரி என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அண்மையில் ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.எம்.ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று அழைப்பதை விடவும், தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று கூறி இருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் பாஜக தரப்பில் மட்டும் தமிழ்நாடு, தமிழகம் ஆகிய இரண்டுமே சரி என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

விக்ரமன்
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் தமிழ்நாடு விவகாரம் எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் விக்ரமனின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதியாகவும், போட்டியாளராகவும் அனைத்து இடங்களிலும் மக்களை ஈர்த்து, கடைசி வாரத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மனிதர்களுக்கு அனைத்து விவகாரங்களிலும் அரசியல் தெளிவு இருக்க வேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி வருகிறார்.

டிடி - விக்ரமன்
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டிலும் பொங்கல் கொண்டாட்டம் செய்யப்பட்டது. ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக சென்றுள்ளார். அப்போது பொங்கல் கொண்டாட்டத்தின் போது, விக்ரமன் - டிடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு நாள்
அந்த வீடியோவில் விக்ரமன் டிடி-யிடம் பேசுகையில், இன்று பொங்கல் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல், இன்னொரு முக்கியமான நாளாகும். அது என்னவென்றால், நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வந்த நாள் என்று கூறுகிறார். அப்போது இடைமறிக்கும் டிடி, இதனை தெரிந்து சொல்லுகிறீர்களா அல்லது தெரியாமல் சொல்லுகிறீர்களா என்று தெரியவில்லை.. பரவாயில்லை சொல்லுங்கள் என்று சொல்ல, விவகாரம் தமிழ்நாடு அரசியல் தொட்டது.

சங்கரலிங்கனார்
பின்னர் மீண்டும் விக்ரமன் பேசுகையில் தமிழ்நாடு என்று பெயர் வந்ததற்கு தியாகி சங்கரலிங்கனார் முக்கிய காரணம். தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து, கோரிக்கை நிறைவேறுவதற்கு முன்னதாகவே இறந்தும் போனார். அதன் பின்னர் 1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நன்னாளில் அந்த தியாகிகளின் நினைவுகளை போற்றும் வகையில் இந்த பொங்கலை வைக்கிறோம் என்று தெரிவித்தார்.

சர்க்கரை கொடுத்த டிடி
இதனைத் தொடர்ந்து டிடி பேசுகையில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து வேறு பெயர் பொருத்தமாக இருக்காது. ஒருமுறை இதனை அனைவருக்கும் ஒலிக்கும் வகையில் உரக்க சொல்லுமாறு டிடி விக்ரமனிடம் கூற, தமிழ்நாடு தமிழ்நாடு தான் என்று விக்ரமன் கூறினார். அதற்கு டிடி, அவருக்கு சர்க்கரை கொடுத்தார்.

தமிழ்நாடு
பின்னர் இந்த விவகாரம் நீங்கள் வெளியில் வந்த புரியும் என்று டிடி சொல்ல, விக்ரமன் தனக்கு புரிந்துவிட்டது என்று கூறினார். தொடர்ந்து விக்ரமன் பேசுகையில், சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டை பிரிக்க முயற்சிகள் நடந்தது. கொங்கு நாடு வேண்டும் என்று சில கூட்டம் கோரியது. அப்போது நான், இப்படியே பேசினால், நாங்கள் தமிழ்நாட்டை பெரியார் நாடு என்று அறிவிப்போம் என்றேன். ஆனால் தமிழ்நாடு என்றே பெயரே அனைவருக்கும் பொதுவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சி
பெரியார் நாடு, அண்ணா நாடு, அம்பேத்கர் நாடு என்று எதுவாக இருந்தாலும், தமிழ்நாடு என்ற பெயர் தான் பொதுவானது என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசியலில், தமிழ்நாடு பெயர்க்காரணம் விவாத பொருளாகியுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் தமிழ்நாடு பெயர்க் காரணம் கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications