இளைஞர்களுக்கு எவ்வளவு நல்ல செய்தி சொல்ராரு பாருங்க.. சீமானின் 'கள்ளு' பேச்சுக்கு எச்.ராஜா பாய்ச்சல்
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளு குடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றதாக பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. சீமான் பேச்சை சுட்டிகாட்டி "இதை பார்ப்பவன் உருப்படுவானா? இளைஞர்களுக்கு எவ்வளவு நல்ல செய்தி சொல்ராரு பாருங்க" என கொந்தளித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக போட்டியிடவில்லை. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் போது, இந்த நிலத்தின் நீ மண்ணின் மகன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள உனக்கு என்ன இருக்கிறது? உனக்கு என்ன இருக்கிறது? தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. திரையரங்குகள் இருக்கின்றன. புதியதாக படங்கள் வருகின்றன. குடிப்பாய்.. மயக்கத்தில் படம் பார்ப்பாய்.. திருப்பி வருவாய்.. மது போதை, திரைக் கவர்ச்சி இதிலேயே மூழ்கி நீ திறனற்றுப் போனாய்.. இந்த சீமைச் சரக்கை ஒழித்துவிட்டு கள்ளுக் கடையை திறந்துவிட்டால் இந்த நாடு அழகாக இருக்கும். எந்த பயலும் சொத்தை விற்கமாட்டான். குடிச்சுட்டு சாகமாட்டான். கள்ளை 2 லிட்டர் மேலுக்கு குடிக்கிற ஒரு ஆளை சொல்றா பார்ப்போம்? ரொம்ப பெரிய மொடா குடிகாரனாக இருந்தால் 3 லிட்டர் குடிப்பான்.

எப்படி சீமான் சொல்ற? கல்லூரிக்கு போகும் போது கள்ளு குடிச்சுட்டு போனவனை பார்த்தியாடா? அது நான்தான்.. நான் மட்டுமல்ல என் அண்ணன் தம்பி எல்லாரும்.. எங்கடா ரவி அண்ணே? உட்கார்ந்திருக்கா?
உலகத்துல கல்லூரி வாசலில் கள்ளுக்கடை வைத்து பார்த்திருக்கிறாயா? நானும் எங்க அண்ணனும் படித்த கல்லூரியில்தான்.. வகுப்பு போய் பதிவேட்டை கொடுப்போம். நாலைந்து பேர் பத்து பேர் சேருவோம். கள்ளக்குடிப்போம். நேரா பரமக்குடி போவோம்.. பரோட்டா திண்போம்.. படம் பார்ப்போம். மாலையில் கபடி விளையாடப் போவோம். அப்படி ஜெயிச்சு கொடுத்தால் கள்ளு பரோட்டா படம்.. அவ்வளவுதான். அப்ப பத்து ரூபாய்தான் டிக்கெட்... இதேதான் வேலை. இவ்வாறு சீமான் பேசியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா சீமானின் பேச்சு வீடியோவை சுட்டிக்காட்டி " இதை பார்ப்பவன் உருப்படுவானா? இளைஞர்களுக்கு எவ்வளவு நல்ல செய்தி சொல்ராரு பாருங்க" என கொந்தளித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications