விக்கிரவாண்டியில் வாகன ஓட்டிகள் தலையில் இடியை இறக்கிய டோல்கேட் கட்டணம்.. எவ்வளவு கூடியிருக்கு பாருங்க.. ஷாக்
சென்னை: நாளை மறுநாள் (செப்டம்பர் 1) ஆம் தேதி முதல் பல்வேறு சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் நாளை மறுநாள் அதிரடியாக உயர உள்ளது. ரூ.5 முதல் ரூ. 150 வரை சுங்கக் கட்டணம் உயர்வு இருப்பதாக புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கார், வேன், லாரி, கனரக வாகனங்கள் என வாகனங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம்
சுங்கச்சாவடிகளில் கட்டணமானது தற்போது பாஸ்டேக் முறையில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுங்கச்சாவடிகளில் நேரடியாக பணத்தை செலுத்தி வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தான் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தற்போது சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இதில் 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுங்கக் கட்டணங்கள் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் அதிரடி உயர்வு
இதன்படி தமிழகத்தில் விக்கிரவாண்டி டோல்கேட் உள்பட பல்வேறு டோல்கேட்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இதில் விக்கிரவாண்டி டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற புதிய விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ரூ.5 முதல் ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். ஒருபுறம் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சுங்கக் கட்டணமும் உயர்ந்துள்ளது என வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விலை பட்டியல் வெளியீடு
உயர்த்தப்பட்ட கட்டணத்தின் கீழ் எந்த வாகனங்களுக்கு எவ்வளவு உயரும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
கார், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணமான ரூ.105-இல் மாற்றம் இல்லை. பழைய கட்டணமே நீடிக்கிறது. அதே வேளையில், பலமுறை பயணிக்க கட்டணம் கூட்டப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ள ரூ.155 கட்டணம் ரூ.160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.11,085 ஆக அதிகரிக்கப்படுகிறது
இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ.180 லிருந்து ரூ.185 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பலமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.270 லிருந்து 275 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டிரக் மற்றும் பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ஒன் வே கட்டணம் ரூ.10 உயர்ந்துள்ளது. ரூ.360 ஆக இருந்த கட்டணம் ரூ.370 ஆக உயர்ந்துள்ளது. பலமுறை பயணிக்க கட்டணம் தற்போது ரூ.540 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் ரூ.545 ஆக உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.10,845 லிருந்து ரூ.11,085 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
595 ஆக உயர்த்தப்பட உள்ளது
மல்டி ஆக்சில் எனப்படும் பல அச்சு வாகனங்களுக்கு தற்போது ஒருவழிக் கட்டணம் ரூ.580 ஆக உள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 595 ஆக உயர்த்தப்பட உள்ளது. பலமுறை பயணிக்க வேண்டும் என்றால் ரூ.870 லிருந்து 890 ஆக உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.17,425 லிருந்து ரூ.17,820 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளி பேருந்துகளுக்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. கார், ஜீப், வேன் உள்ளிட்ட உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் மாதாந்திர பாஸ் உள்ளது. இதில் வகை 1-க்கு ரூ.150, வகை 2-க்கு ரூ.300 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்
விக்கிரவாண்டி தவிர மேட்டுப்பட்டி, வீரசோழபுரம், நத்தக்கரை (சேலம்) உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), எலியார் பத்தி (மதுரை) புதூர் பாண்டியாபுரம் (தூத்துக்குடி), அரவக்குறிச்சி,மனவாசி (கரூர்) ஆகிய சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications