அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழ் கட்டாயம்.. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படியும் வைத்திருக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 13-ன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகள் என 5:3:2 என்ற விகிதாச்சாரப்படி அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர். இந்தக் குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மே 15-ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வரும் மே 15 ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன், அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தி உள்ளனர். வரும் மே 15 ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications