Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 5,200 விநாயகர் சிலைகள்..பிரம்மாண்டம் காட்ட தயாராகும் இந்து அமைப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5,200 விநாயகர் சிலைகள் சென்னை முழுவதும் வைக்க உள்ளோம் என்று இந்து அமைப்பினர் கூறியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 65 இந்து அமைப்புகளுடன் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Vinayagar Chaturthi 5,200 Ganesha idols in Chennai says Hindu Munnani organizations

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய இந்து சத்ய சேனா நிர்வாகி வசந்த குமார்,
"கடந்த 2018-ம் ஆண்டு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளின் படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என காவல்துறை கூறியுள்ளது. அதை நாங்கள் கடைப்பிடிக்க தயாராக உள்ளோம்.

மத நல்லிணத்துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடத்திற்கு மின்சாரம் தேவைப்படுவதால் மின்சார பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்தில் முன்பணமாக 7000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்திவிட்டு சிலைகளை வைத்து வருகிறோம்.

கடந்த 2018ஆம் ஆண்டு மின்வாரியத்தில் கட்டிய முன்பணம் இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை. எனவே இந்த முறையும் அதே தவறு நடக்காமல் இருக்க மின்வாரியம் வழிவகை செய்து, சிலையை எடுத்த உடனே பணத்தை திருப்பி தரவேண்டும்.

விநாயகர் சிலை வைக்கும் முன் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று சிலைகளை வைக்க வேண்டும் என காவல்துறை கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம். சென்னை மாநகரங்களில் அனைத்து இந்து அமைப்புகளும் இணைந்து 5,200 சிலைகளை வைக்க உள்ளோம். செப்டம்பர் 4ஆம் தேதி வரை சிலைகள் கரைக்கப்படும். 10 அடிக்கு குறைவாக சிலைகளை வைக்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுக்கு பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உட்பட அதனைச் சுற்றி விநாயகர் சிலைகள் செய்யும் இடங்களில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு இடங்களில் சிலைகள் செய்யப்பட்டு வருவதால், அங்கு சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலைகள் செய்யும் இடத்தில் சிலை வாங்குபவர்களுடைய முழு விவரங்களையும் காவல்துறை பெற்ற பின்னரே சிலை விற்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னையில் விநாயகர் சதுர்த்தியன்று எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, மொத்தம் 20,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களான ஜாம்பஜார், திருவல்லிக்கேணி மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள 89 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட சிலைகளை கரைக்கும் நிகழ்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அப்போது மொத்த காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் பீச் மற்றும் திருவான்மியூர் என நான்கு இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+