உற்றுபாருங்க.. சாமி படங்களுக்கு நடுவே ஜெயலலிதா போட்டோ.. விநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்த சசிகலா!
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சசிகலா இன்று பூஜை அறையில் பூஜை செய்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஏராளமான சாமி படங்களுக்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்த நிலையில் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் இணையதளத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை, போட்டோக்கள் வைத்து பூஜை நடத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும் பலர் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு சங்கத்தின் பொது இடங்களில் பிரமாண்டமாக விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள் வாழ்த்து
இதனால் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பூஜை செய்த சசிகலா
இந்நிலையில் முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதாவின் தோழியான சசிகலா விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் பூஜை செய்தார். மேலும் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வெளியே உள்ள ஜெயகணபதி விநாயகரை சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டவர்கள் தரிசனம் செய்தனர். இதற்கிடையே சசிகலா பூஜை அறையில் பூஜை செய்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பூஜை அறையில் ஜெயலலிதாவின் போட்டோ
‛ஆணை முகத்தினை ஐந்து கரத்தினை' என தொடங்கும் பாடலுடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ 2.16 நிமிடங்கள் வரை ஓடுகிறது. இந்த வீடியோவில் பூஜை அறையில் ஏராளமான சாமி படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சசிகலா கற்பூரம் காட்டி மணி அடித்து பூஜை செய்து பூஜை செய்கிறார். இந்த பூஜை அறையில் சாமி படங்களுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவும் இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
தற்போது இந்த வீடியோவை சசிகலாவின் ஆதரவாளர்கள் இணையதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நேற்று சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்டு இருந்த வாழ்த்து செய்தியில், ‛‛அதில்,"வினை தீர்க்கும் ஆனைமுகன், முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல ஞானமுதல்வனை இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மனமுருக வணங்கி, சதுர்த்தி நாயகனின் அருளைப் பெற்று அனைவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமையட்டும். சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், நாடெங்கும் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications