புலிக்குறிச்சி கிராமத்தில் முதல் எம்பிபிஎஸ் மாணவி பூமாரிக்கு தங்கம் தென்னரசு பாராட்டு!
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் புலிக்குறிச்சி கிராமத்தில் பூமாரி எனும் மாணவி வறுமையையும் பொருட்படுத்தாமல் படித்ததால் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தனியார் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. அந்த கிராமத்தில் முதல் மாணவியாக எம்பிபிஎஸ் படிக்க போகும் பூமாரியை நேரில் அழைத்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகுவின் மகள் பூமாரி. 2023ஆம் ஆண்டு திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த பூமாரி, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்தார்.

பொன்னழகுவின் கணவர் முத்துப்பாண்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் விறகு வெட்டி தனது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். இத்தகைய கடினமான சூழலிலும், பூமாரி சேலத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும், எம்.பி.பி.எஸ் மீதான ஆர்வத்தால் மீண்டும் நீட் பயிற்சி பெற்று இந்த ஆண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார்.
தற்போது நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க பூமாரிக்கு இடம் கிடைத்துள்ளது. வறுமையிலும் தனது விடாமுயற்சியின் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து புலிக்குறிச்சி கிராமத்தின் முதல் மருத்துவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவி பூமாரியின் சிறப்புமிக்க முயற்சியைப் பாராட்டும் வகையில், அவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டபோதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பூமாரியின் அயராத முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது பெருமைக்குரிய செயல். நம் ஊரிலிருந்து, குறிப்பாக ஒரு கிராமப்புறத்திலிருந்து ஒரு மருத்துவர் உருவாகியிருப்பது நமக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று மனதார பாராட்டினார்.
அரசு இடஒதுக்கீட்டில் பூமாரிக்கு இடம் கிடைத்தாலும் அவரால் பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே 3 குழந்தைகளை படிக்க வைக்க பொன்னழகு கடன் வாங்கி செலவு செய்திருந்த நிலையில் தற்போது மகளின் மருத்துவ படிப்புக்கு தமிழக அரசோ தன்னார்வலர்களோ உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
அதாவது 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவிக்கு கல்விக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எல்லாம் இலவசம் என்றாலும் புத்தகம் வாங்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கு பணம் இல்லாமல் பூமாரி தவித்து வந்தார். இதை செய்தி மூலம் அறிந்த தங்கம் தென்னரசு, அந்த மாணவியை அழைத்து பாராட்டியதுடன் அவருக்கு சிறு நிதியுதவியையும் செய்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications