விருதுநகர் டூ சேலம்.. பின்னாடியே திருவள்ளூர்.. தலைமை செயலகத்தை நெகிழ வைத்த தமிழக கலெக்டர்கள்.. வாவ்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.. அதிலும், அரசு அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
வழக்கமாக, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை போலவே, இந்த முறையும் கொண்டாட தமிழக மக்கள் முன்கூட்டியே தயாரானார்கள்.. பொதுமக்கள் சொந்த ஊர் பயணிப்பதற்காகவே, தமிழக அரசும் பல்வேறு வசதிகளை செய்து தந்திருக்கிறது.

நெகிழ்ச்சி: அதேபோல, மாவட்ட ஆட்சியர்கள், தங்களுடைய மாவட்ட மக்களுடன் இணைந்து இந்த பொங்கலை கொண்டாடியிருப்பது, நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது..
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அரசு அலுவலர்களுக்கு கயிறு இழுத்தல், இளவட்ட கல் தூக்குதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன... பிறகு, நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவில் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்ததுடன், தன்னுடைய வீட்டில் இருந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் கிளம்பி சென்றார்.. எப்பவுமே காரில் வரும் கலெக்டர், இந்த முறை மாட்டு வண்டியில் வருவதை பார்த்ததுமே, மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கார்மேகம்: அதேபோல, சேலம் மாவட்ட அலுவலக வளாகத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து வந்தனர்.. அத்துடன், பானை உடைக்கும் போட்டியிலும் இவர்கள் பங்கேற்றது, அம்மாவட்ட மக்களை உற்சாகப்படுத்தியது.
தலைமை செயலகம்: திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், டான்ஸ் ஆடி பொங்கலை கொண்டாடினார்.. மக்களோடு இணைந்து உற்சாகமாக இருந்ததை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.
இப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாட்டு வண்டி ஓட்டுதல், ஆடல் பாடல்களில் கலந்துகொண்டு பரவசப்படுத்தல் என பல்வேறு நிகழ்வுகளில் மக்களோடு மக்களாக இணைந்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.. பெரும்பாலான கலெக்டர்கள் இப்படி உற்சாகமாக பொங்கலை தங்கள் மாவட்ட மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் பொங்கலை கொண்டாடியதை, தலைமைச்செயலகத்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்களாம்..!!!












Click it and Unblock the Notifications