அப்படியே ஒரு ஜெராக்ஸ்! உச்சகட்ட குஷியில் ஒ.செ.க்கள்! சொன்னதை கேக்கலயே.. கொந்தளிப்பில் உ.பி.க்கள்!
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அமைதியாக திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் நள்ளிரவில் வெளியான ஒன்றிய செயலாளர்கள் பட்டியல் ஏற்கனவே இருந்த பட்டியலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல இருப்பதாகவும் இதனால் ஒன்றிய செயலாளர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் மாற்றம் வருமா என எதிர்பார்த்த தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது
தேர்தல் ஆணைய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக உட்கட்சி தேர்தல்
முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஏற்கனவே பதவியில் உள்ள ஒன்றிய செயலாளர்களே பதவியில் தொடரலாம் என மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி தலைமையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளை தவிர யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.

ஒன்றிய செயலாளர்கள்
அவ்வாறு உட்கட்சி மோதல் காரணமாக வேட்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தேர்தல் நடத்தும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக யூகங்கள் வெளியாகின. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சியாக இருந்த போது கடுமையாக உழைத்தவர்களை ஆட்சிக்கும் வந்தவுடன் மாற்றினால் நன்றாக இருக்காது என ‘தலைமை' நினைத்ததாகவும், இதனால் மாற்றம் இருக்காது எனக் கூறப்பட்டது.

பட்டியல் வெளியானது
இது தொடர்பாக நாமும் விரிவாக பேசி இருந்த நிலையில் சொன்னது போலவே கிட்டத்தட்ட 98.5% ஒன்றிய செயலாளராக ஏற்கனவே இருந்தவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர் நேற்று நள்ளிரவில் ஒன்றிய செயலாளர் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் விழுப்புரம் தொடங்கி கன்னியாகுமரி வரை திமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

தலைமைக்கு புகார்
சில ஒன்றிய செயலாளர் கட்சி விதிகளுக்கு எதிராகவும் தொண்டர்களை கண்டு கொள்வதில்லை என புகார்கள் எழுந்து நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏற்கனவே இருந்த ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதனால் பதவி மீண்டும் கிடைத்த உற்சாகத்தில் ஒன்றிய செயலாளர்களும் சொன்னது நடக்கவில்லையே என்ற கொந்தளிப்பில் உடன்பிறப்புகளும் உள்ளனர். இதனையடுத்து தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி











Click it and Unblock the Notifications