சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது
சென்னை: சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை பெரம்பூர், பட்டேல் ரோடு பகுதியில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த வீட்டுக்குள் திடீரென நுழைந்தார். துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கு இருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு உள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் செய்தனர். இதில் அந்த துப்பாக்கி ஆசாமி வியாசர்பாடி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும் இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் அசல் துப்பாக்கியா அல்லது போலி துப்பாக்கியா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் பொழுது இது சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் போல உள்ளது. அவரது நண்பர் சிவா என்பவர் அவருக்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார். அவரது துப்பாக்கி குறித்த உண்மைத் தன்மையை அறிய ஆயுத சோதனை நடத்த உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications