செங்கோட்டையனுக்கு கொம்பு சீவி விட்டது யார்? அதிமுக பலவீனமே பாஜகவின் பலம்? அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.. இது அதிமுகவில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கட்சி அலுவலகத்தில் நாளை விளக்கம் தரப்போவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். செங்கோட்டையன் மீதான நடவடிக்கை குறித்து அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பிரபல சேனல்களுக்கு தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தந்த ஒரு பேட்டியில் சொல்லும்போது, "எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, சசிகலா, ஓபிஎஸ் இருவருமே வழக்காடிகள்.. இதில் சசிகலா ஒரு வழக்காடி.. அதிமுக பொதுச்செயலாளர் என்பதே சசிகலாவின் நிலைப்பாடாக உள்ளது..

மற்றொரு வழக்காடி ஓபிஎஸ் ஆவார்.. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு, செயற்குழுவுக்கு அங்கீகாரம் இல்லை, அது கட்சி விதிகளுக்கும் முரணானது என்பதே ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
பொதுக்குழுதான் நீக்க முடியும்
மேற்கண்ட இந்த 2 வழக்காடிகளுடன் இணைந்து செங்கோட்டையன் உறவாடுவது கட்சி விரோத கொள்கையாகத்தான் கருதப்படும்.. டிடிவி தினகரன் தனிக்கட்சி வைத்துள்ளார்.. எனவே செங்கோட்டையன் நீக்கம் எதிர்பார்த்த ஒன்றுதான்..
செங்கோட்டையனை நீக்கினால்தான், யாராக இருந்தாலும் நாங்கள் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியும்..
நாளைக்கு செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.. செய்தியாளர்களிடம் நாளை அவர் பேசும்போது, "என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது, நான் கட்சியில் அமைப்பு செயலாளர்.. பொதுக்குழுதான் தன்னை நீக்க முடியுமே தவிர, எடப்பாடி பழனிசாமியோ, அல்லது சிறு குழுவோ என்னை நீக்க முடியாது.
இதுகுறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய போகிறேன்.. நோட்டீஸ் பீரியடும் எனக்கு தரப்படவில்லை.. எனவே இதையெல்லாம் வைத்து நான் இடைக்கால தடை கேட்பேன்.. வழக்கு தொடருவேன் என்றுதான் செங்கோட்டையன் நாளை சொல்லக்கூடும்.
நால்வருக்கு என்ன லாபம்
இதனால் நால்வருக்கும் அரசியல் லாபம் என்ன என்று பார்த்தால், விஜய் தலைமையிலான கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும்.. அதற்கு டிடிவி தினகரனும் தயாராகவே இருக்கிறார்.. மேலும், இனி வரும் நான்கைந்து இந்த விஷயம் பேசுபொருளாகும்.
இவர்கள் சேர்ந்து தமிழகத்திலே 25 தொகுதிகளிலே குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருப்பார்கள். ஆனால், அது வெற்றிக்கு போகாது. எனவே இன்னொரு கூட்டணி உருவாக வேண்டும. விஜய் கட்சிதான் மிச்சம் உள்ளது.. விஜய்யின் விருப்பம் இதுவரை தெரியவில்லை.
தற்போது களத்தில் 4 அணிகள் உள்ளன. இதில் இன்னொரு கூட்டணி உருவாகாவிட்டால், செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் என்று இந்த அணி, 5வது அணியாகத்தான் தேர்தலில் மாறும். திமுகவுக்கு எதிரான வாக்கு வங்கி மேலும் பிளவுபடும். அதேபோல எடப்பாடி பழனிசாமியின் வாக்கு வங்கியும் தேர்தல் சமயத்தில்தான் தெரியவரும்.
பிரிந்தவர்களை ஒன்றிணைப்பார்களா?
அதேபோல, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் இவர்கள் அனைவரும் இணைந்து, அதிமுகவிலிருந்து ஏற்கனவே கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்..
எனினும் கட்சியில் உள்ளவர்கள் இவர்கள் நால்வரின் பின்னாடியும் உடனே செல்வார்களா? என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தங்களுக்கு எம்எல்ஏ சீட் வேண்டும், ஆதாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் செல்வார்கள்..
பாஜகவுக்கு மகிழ்ச்சி
அதேபோல இந்த விஷயம் பாஜகவுக்கு மகிழ்ச்சியை தரும்.. ஏனென்றால் 2026 அவர்களுக்கு முக்கியமில்லை.. இதை நயினார் நாகேந்திரனே பலமுறை சொல்லி உள்ளார்.. 2026-க்கு பிறகு வரும் தேர்தலே பாஜகவுக்கு முக்கியம்.. எனவே அதிமுக பலவீனப்பட்டால்தான் பாஜகவுக்கு லாபம் என்பதால், இதனை அவர்கள் ரசிக்கவே செய்வார்கள்..
அன்று டெல்லியில் செங்கோட்டையனுக்கு கொம்பு சீவி விட்டது எல்லாமே பாஜகதான்.. உட்கட்சி விஷயத்தில் தலையிடக்கூடாது, செங்கோட்டையன் போன்ற சீனியர்களை அழைத்து பேசக்கூடாது என்று தெரிந்தும்தான், பாஜக இதில் தலையிட்டு பேசியிருக்கிறது. இதற்கு காரணம் பாஜகவிடம் எதிர்கால திட்டம் உள்ளது.
அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த பிறகுதான், ஒருங்கிணைப்பு என்ற முயற்சியை எடுத்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் செங்கோட்டையனின் பதவிபறித்தபோதுகூட பாஜக அமைதியாகவே இருந்தது..
இப்போதும் அமைதி காக்கிறது.. பாஜகவை நம்பினால் கைவிடப்படுவார் என்றே அர்த்தம்.. பாஜக அன்று ஊக்கம் கொடுக்காவிட்டால், செங்கோட்டையன் இப்படியான கருத்துக்களை சொல்லியே இருக்க மாட்டார். அவரது சுபாவத்துக்கு இது பொருத்தமானதாகவும் இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவைவிட பவர்புல் செங்கோட்டையன்?
அதேபோல மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாசன் கூறும்போது, "கட்சியை எப்படி செங்கோட்டையன் ஒருங்கிணைப்பார்? அவர்தான் அடிப்படை உறுப்பினர் பதவியிலேயே இல்லையே? செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை திமுகவின் B டீம் என்றுதான் நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி சொன்னார்..
திமுகவின் பி-டீம் என்று ஒருவர் அடையாளப் படுத்தப்பட்டால், அவர் அதிமுகவில் இருக்க முடியாது என்றுதானே அர்த்தம்?
2017-ல் தினகரனும், சசிகலாவும் பொதுக்குழுவால் வெளியேற்றப்பட்டு, இன்றுவரை வெளியேதான் இருக்கிறார்கள்.. அவர்களால் என்ன ஒருங்கிணைக்க முடிந்தது? அவர்களைவிடவா செங்கோட்டையன் சக்தி வாய்ந்தவர்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications