திருத்தணி ரீல்ஸ் விவகாரம்! வடமாநிலத்தவர் என்பதால் ஒடிஸா இளைஞர் மீது தாக்குதல் இல்லை! அஸ்ரா கர்க்
சென்னை: திருத்தணி அருகே ஒடிஸா இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவர் வடமாநிலத்தவர் என்பதற்காக தாக்கப்பட்டனரா என்பது குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் விளக்கியுள்ளார்.
திருத்தணியில் புறநகர் ரயிலில் ஒடிஸா மாநிலத்தவர் ஒருவரை 17 வயதுக்குள்பட்ட 4 பேர் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் கூறியிருப்பதாவது: திருத்தணி அருகே ஒடிஸா இளைஞர் வேலைக்காக தமிழகத்திற்கு வரவில்லை. அவர் அவ்வப்போது ரயிலில் அரக்கோணம், திருத்தணி என பயணித்து வந்தது தெரியவந்தது.
அவர் சுற்றுலா செல்லவே வந்துள்ளார். அந்த புறநகர் ரயிலில் அந்த ஒடிஸா இளைஞர், அந்த 4 சிறுவர்களையும் (17 வயது) பார்த்த போது, அவர்கள், தங்களை முறைப்பதாக கருதி, அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்ததும் ரயில்வே போலீஸார் அந்த இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவர் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். மருத்துவமனையில் அவர் கைப்பட கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார்.
அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதை நாம் கட்டாயப்படுத்தி இங்கேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என கூற முடியாது. அவருக்கு அரசு சார்பில் சிறப்பான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
வடமாநில இளைஞரை தாக்கிய 4 சிறுவர்களிடம் இருந்து இரு பட்டாக்கத்திகளும் இரு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் 3 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் இன்னொரு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருடைய பெற்றோரிடமு் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர்.
4 சிறுவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் அவர்கள் உச்சபட்ச வழக்கான 307 என்ற கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர் என்பதால் அந்த நபரை சிறுவர்கள் தாக்கவில்லை.
மேலும் அவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தியிருந்தனரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். பட்டா கத்திகள் ஏது என சிறுவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கு பள்ளியில் ஒரு கும்பலுடன் பிரச்சினையாம். அவர்கள் எந்த நேரத்திலும் தங்களை தாக்குவார்கள் என்ற அச்சத்தால் அந்த பட்டாக்கத்திகளை வீட்டில் வைத்திருந்ததாகவும் அதை வெளியே செல்லும் போது எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. சமூகவலைதளங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இது போல் சட்டத்திற்கு புறம்பாக யாராவது ரீல்ஸ் போட்டால் அவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்து அவர்களிடம் இருந்து கடிதம் வாங்கிக் கொள்கிறோம்.
தாக்குதலுக்குள்ளான நபருக்கு எத்தனை இடங்களில் காயங்கள் என தெரியவில்லை. ஆனால் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ரயிலில் பட்டாகத்தியுடன் அவர்கள் எப்படி வந்தார்கள் என தெரியவில்லை. மேலும் சம்பவம் நடந்தது எங்கள் பிரிவுக்குள்பட்டது அல்ல. அது ரயில்வே போலீஸாருக்குள்ளானது. இவ்வாறு அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications