சென்னையில் குடிநீர் லாரிகளுக்கான நேரம் மாற்றம்.. கட்டுப்பாடுகள் விதிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தண்ணீர் லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற 10 வயது மாணவி பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு காலை 6 மணிக்கு மேல் அனுமதியில்லை. ஆனாலும் அவ்வப்போது வாகனங்கள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

கடந்த 18ம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 10 வயது சிறுமி சவுமியா தனது தாய் யாமினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலியானார்.
பள்ளி நேரத்தில் தண்ணீர் லாரி நுழைந்ததே இந்த விபத்திற்குக் காரணமென போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் லாரிகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். தண்ணீர் லாரி விஷயத்தில் விதிமுறைகளை போக்குவரத்து போலீசார் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை கடைபிடிக்காத போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது சென்னையில் குடிநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் காலை 5.30 மணிக்கு பதில் 4.30 மணிக்கே குடிநீர் லாரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் 7.30 வரை திட்டமிட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
அதன்பிறகு காலை 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகு வழக்கமான முறையில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏற்றார்போல குடிநீர் வினியோக பகுதிகளை மாற்றியமைக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கி உள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications