ஸ்டாலினால் ஒருபோதும் முடியவே முடியாது.. தமிழகத்தில் மாற்றம் வரும்.. சொல்கிறார் முருகன்!
சென்னை: இப்போது அதிமுக கூட்டணியுடன் தான் உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பாஜக ஆட்சி தமிழகத்திலும் அமையும் என்றும் தெரிவித்துள்ளார் எல் முருகன்.
தமிழகத்தில் எதிர்கட்சிகளின் கூடாரம் காலியாக கொண்டிருக்கிறது என்று தெரிவித்த முருகன், தமிழகம் முழுவதும் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் சேர்ந்து வருவதாக கூறியுள்ளார். நாங்கள் கைகாட்டுபவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் எல். முருகன்.
சிவகங்கை அருகே காளையார்கோவிலில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் மேப்பல் சக்தி தனது
ஆதரவாளர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஆட்சி அமைக்க முடியும்
இணைப்பு விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், வருகிற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக பிரதிநிதிகள் தமிழக சட்டசபைக்கு செல்வர். பாஜகவால் கைகாட்டபடுபவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா தான் வழிகாட்டியாக உள்ளது என்று கூறினார்.

முக ஸ்டாலின் முதல்வராக முடியாது
திமுகவைச் சேர்ந்த பலர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் சிலரும் கூட எங்கள் கட்சியில் சேர தயாராக உள்ளனர். மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று தெரிவித்தார்.

நவீன தீண்டாமை
தீண்டாமை. திமுகவினர் நடத்துகிற பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளை நடத்த மாட்டோம் என சொல்ல தயாரா?திமுக ஏற்படுத்தி இருந்த மாயையை உடைத்து தேசியம், தெய்வீகம் பக்கத்திற்கு மக்கள் அணி திரண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மாற்றம் வரும்
விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பாஜக ஆட்சி தமிழகத்திலும் அமையும். பல ஆண்டுகள் கனவான ராமர் கோயில் கட்டுவதை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.

கூடாரம் காலியாகுது
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியுடன் தான் உள்ளோம். தமிழகத்தில் எதிர்கட்சிகளின் கூடாரம் காலியாக கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

ஒற்றுமையை விரும்புகிறது
இதனிடையே பாஜக தலைவர் முருகன், ஆரம்பம் முதலே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வருகிறார். தமிழக பாஜகவை பொறுத்தவரை வலுவான ஒற்றுமையாக அதிமுக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. அப்போது தான் தேர்தலில் திமுகவுன் போட்டியிட முடியும் என்பதால் அதை விரும்புகிறது. அந்த வகையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்து மோதல்கள் வந்த போது அதிருப்தியில் இருந்த நிலையில் இப்போது பிரச்சனைகள் தீர்ந்து விட்டதால் மகிழ்ச்சியில் இருப்பது தெரிகிறது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications