பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக சொன்ன மோடி! தமிழ்நாட்டில் நாங்க சந்தோசமா இருக்கோம்! பீகாரிகள் கருத்து
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. மோடியின் பேச்சுகளுக்கு திமுக தரப்பு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.. நிம்மதியாக இருக்கிறோம்.. தமிழ்நாட்டில் எங்கள் வாழ்க்கை சரியாக இருக்கிறது என்று தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகாரிகளை அவமதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் பீகார்காரர்களை துன்புறுத்துகிறார்கள், ஆனாலும் ஆர்ஜேடி அமைதியாக இருக்கிறது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர்கள் தனது மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கூட கூறினார் - அந்த நேரத்தில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தின் மகள் கைதட்டி ஆதரித்துக்கொண்டிருந்தார் " என்று பிரதமர் மோடி கூறினார்.

மோடி சர்ச்சை பேச்சு
பீகார் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. மோடியின் பேச்சுகளுக்கு திமுக தரப்பு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பு எழுப்பி உள்ள கேள்வியில், குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்திருக்கிறது; ஆனால் மத, இன, மொழி, சாதிய அவதூறுகளை தேர்தல் வெற்றிக்காக மேடைகளில் பரப்புவதும், அதனையே முழு நேர தொழிலாக செய்யும் பிரதமரை இப்போது தான் இந்திய நாடு பார்க்கிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார் பிரதமர் மோடி. பின்னர், ஒடிசா மாநில தேர்தல் பரப்புரையின் போது, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி, தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார் பிரதமர் மோடி.
மோடி வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்
அப்போதே கடுமையான கண்டனங்களை தமிழ்நாடு எழுப்பிய போதும் அவர் திருந்தியதாக தெரியவில்லை. இப்போது மீண்டும் "தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக" தேர்தல் பிரச்சார மேடையிலேயே வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.. நிம்மதியாக இருக்கிறோம்.. தமிழ்நாட்டில் எங்கள் வாழ்க்கை சரியாக இருக்கிறது என்று தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் தமிழ்நாட்டில் நன்றாக இருக்கிறோம். 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறோம். இங்கே ஆட்சியும் சரியாக இருக்கிறது. எங்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். சென்னை சூப்பராக இருக்கிறது. ஸ்டாலின் அரசும் சூப்பராக உள்ளது. நல்ல சந்தோசமாக இருக்கிறோம்.
அந்த ஊரில் வேலை இருக்காது. வேலை இருந்தாலும் சம்பளம் இருக்காது. ஆனால் இங்கே நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். வேலையும் சரியான அளவில் கொடுக்கிறார்கள். எங்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள பீகாரில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை இங்கே நீங்கள் முழுமையாக பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications