Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் பல பணிகளில் இருக்கிறாராம்.. நேரம் கேட்டு 2 மாதங்களாக காத்திருக்கிறோம்.. மா.சுப்பிரமணியன்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக 2 மாதங்களாக காத்திருப்பதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநரை சந்திப்பதற்காக 2 மாதங்களாக காத்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய ஆயூஷ் அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, அடுத்த சில நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பணி நியமன ஆணை, மருத்துவ உபகரணம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் படிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நான் அரசு பள்ளியில் படித்து தான் இங்கே வந்துள்ளேன்.

ஒரே மாநிலம் தமிழ்நாடு

ஒரே மாநிலம் தமிழ்நாடு

சவாலில் வென்று இந்த நிலைக்கு வந்துள்ள நீங்கள் தான் வாழ்க்கையின் வெற்றியாளர்கள். அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தான் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக உள்ளனர். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் மக்கள் அதிகமாக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் போராடி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி

மா.சுப்பிரமணியன் பேட்டி

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்ச மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அடுத்த வாரம் முதலமைச்சர் 17 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1,018 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கி வைக்கிறார்.

மருத்துவ கட்டமைப்பு பணிகள்

மருத்துவ கட்டமைப்பு பணிகள்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.65 கோடி செலவில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடத்தையும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் மருத்துவமனையில் ரூ.72 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்களும், உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன. மருத்துவத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.1,941 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு துவக்க பணிகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.

துணைவேந்தர் பொறுப்பு

துணைவேந்தர் பொறுப்பு

தொடர்ந்து, கடந்த டிச.31ம் தேதியோடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு முடிவு பெற்றது. பின்னர் முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கடந்த ஜனவரின் 4ம் தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. அதற்காக ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் தான் இனி அந்த குழுவிற்கு வழி காட்ட வேண்டும்.

2 மாதங்களாக காத்திருப்பு

2 மாதங்களாக காத்திருப்பு

ஆளுநரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 நபர்களை தேர்ந்தெடுத்து ஆளுநரிடம் வழங்கும். இந்த குழுவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு 2 மாதங்களாக காத்திருக்கிறோம். அவருடன் இணக்கமாக செல்லவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து ஆளுநர் செயலாளரிடம், சுகாதாரத்துறை செயலாளர் பேசி வருகிறார். ஆளுநர் பல்வேறு பணிகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நீர் தேர்வு விலக்கு

நீர் தேர்வு விலக்கு

பின்னர், நீட் தேர்வு விலக்கு பற்றிய கேள்விக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். அதற்கான விளக்கங்களை ஏற்கனவே சட்ட அல்லுநர்கள் குழு மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய பதிலை அளித்துவிட்டது. அடுத்ததாக முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+