கிழியாத சட்டையை கிழித்து போஸ் கொடுக்க மாட்டோம்.. ஸ்டாலினை கலாய்த்த பிரேமலதா!
திமுக மீது தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
Recommended Video

சென்னை: திமுக மீது தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
திமுக திருட்டு கட்சி என்று குற்றஞ்சாட்டியது தொடங்கி, அதன் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்பது வரை, பிரேமலதா இன்று பேசியது மொத்தமும் திமுகவிற்கு எதிரான அரசியல். சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
சந்திப்பில் இவர் மிகவும் கோபமாக பேசினார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை இவர் வைத்தார்.

ஸ்டாலின் நிகழ்வு
2017 பிப்ரவரி மாதம் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில்தான் திமுக தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த புகைப்படம் பெரிய வைரலானது. சட்டையை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் காரில் இருந்து வெளியேறும் வீடியோவும் வைரலானது.

என்ன பேட்டி
இதைதான் தற்போது கிண்டல் செய்து பிரேமலதா பேட்டியளித்து இருக்கிறார். பிரேமலதா தனது பேட்டியில், மக்களுக்காக ஜெயலலிதாவை சட்டசபையில் எதிர்த்து பேசியது கேப்டன். அவர் அந்த அளவிற்கு தைரியமாக இருந்தார். எந்த அரசியல் தலைவரும் சட்டசபையில் அவ்வளவு தைரியமாக பேசியது கிடையாது.

கேலி
ஆனால் ஸ்டாலின் அப்படிப்பட்டவர் கிடையாது. கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. அப்படி கேவலமாக நாங்க நடந்துகொள்ள மாட்டோம். நாங்கள் நேர்மையானவர்கள். திமுக தலைவர் கருணாநிதிதான் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தது.

எல்லாம் வேறு
ஆனால் நட்பு என்பது வேறு அரசியல் என்பது வேறு என்று எல்லோருக்கும் தெரியும். திமுக என்றாலே திருட்டு தில்லுமுல்லு கட்சி. விஜயகாந்தை சந்திக்க வந்த போது அரசியல் பேசவில்லை என ஸ்டாலின் வெளிப்படையாக கூறினால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன், ஆனால் அவரால் அப்படி கூற முடியாது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications