சென்னை இந்தி பிரசார சபாவை இழுத்து மூடுக! மே 13-ல் 5 மாநில "நாம் திராவிடர்கள்" ஒன்று கூடி போராட்டம்!
சென்னை: திராவிட மொழிகள் பேசுகிற மாநிலங்களில் இந்தி மொழிக்கான இந்தி பிரசார சபா செயல்படுவதைக் கண்டித்தும் சென்னையில் இயங்கிவரும் இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வலியுறுத்தியும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நாம் திராவிடர்கள் அமைப்பு மே 13-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் திராவிடர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்னிந்திய மாநிலங்களில் திராவிடர்களை ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய அமைப்பு நாம் திராவிடர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்தி என்ற ஒரே ஒரு மொழியின் வளர்ச்சிக்காக இந்தி பிரசார செயல்படுத்தப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. சென்னையில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார சபாவை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 13-ந் தேதி சென்னையில் நாம் திராவிடர்கள் அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு நாம் திராவிடர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மே13-ந் தேதி போராட்டம் தொடர்பாக நாம் திராவிடர்கள் அமைப்பின் நிறுவனர் கதிர் ஆர்.எஸ்., நமது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தியாளரிடம் கூறியதாவது: இந்தி பிரசார சபா என்பது இந்தி மொழி வளர்ச்சிக்கான ஒரு அமைப்பாக மட்டும் பார்க்கப்படுகிறது. இந்தி மொழி திணிப்புக்கான ஒரு இடமாகவே இந்தி பிரசார சபாவை பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தி பிரசார சபா என்பது இந்தியர்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் குறிப்பாக மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பின்னும் இந்தி பிரசார சபா செயல்படுவது அர்த்தமற்றது. அதுவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி பிரசார செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தி பேசாத மாநில மக்களின் வரிப்பணத்தில் இந்தி பிரசார சபா நடத்தப்பட்டு வருவது அநீதியானது. ஆகையால்தான் தமிழ்நாட்டின் சென்னையில் இந்தி பிரசார சபா செயல்படக் கூடாது; அதனை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இந்தி பிரசார சபா என்பது இந்தி மொழி பேசுகிற மாநிலங்களில் வைத்து கொள்ளப்படலாம். ஆனால் அதேபோல 22 இந்தி மொழிகளையும் பிரசாரம் செய்வதற்கு, வளர்த்தெடுப்பதற்காக நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் 22 மொழி பேசுகிற மாநில இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாமல் இந்தி மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் கட்டாயமாக்குகிறது. இந்தி மொழி பேசாத மாநில அதிகாரிகள், ஊழியர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்படுகிறது. ஆகையால் இந்தி பிரசார சபாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

திராவிடர்கள் என்ற வாதம் தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்படுகிறது; முன்வைக்கப்படுகிறது என திராவிடர் இயக்க எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் திராவிடர் என்கிற மரபின உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட நாடு கோரிக்கையை கேரளாதான் முன்னெடுத்தது. திராவிடர் உணர்வு அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் இருக்கிறது என்பதைத்தான் நாம் திராவிடர்கள் அமைப்பு தமது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மே 13-ந் தேதியன்று இந்தி பிரசார சபாவை இழுத்து மூடுக என்ற முழக்கத்துடன் சென்னை எழும்பூர் ராஜரத்தினரம் விளையாட்டரங்கத்தில் மாலை 4 மணிக்கு நாம் திராவிடர்கள் ஒன்று கூடுகின்றனர். இதில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். எழுத்தாளர்கள் கோவி.லெனின், டான் அசோக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். Dravida City Movement (Karnataka), We Dravidians(Tamil Nadu) இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இவ்வாறு கதிர் ஆர்.எஸ். கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications