டெல்லி போன கேப்பில் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. திடீரென எடப்பாடி பக்கம் திரும்பிய ஆதரவாளர்கள்
சென்னை: அதிமுக கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளராக கருதப்பட்ட பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பண்ணாரி, இன்று ஏ.கே. செல்வராஜ்ஜை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே. செல்வராஜ், செங்கோட்டையனுக்கு பதிலாக அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

10 நாட்கள் கெடு விதித்தார்
கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அப்போது முதல் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார். பொது நிகழ்ச்சிகளிலும் அவருடன் பங்கேற்பதை புறக்கணித்தார்.
இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசினார். செங்கோட்டையனின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் இந்த பணிகளை செய்யாவிட்டால் அந்த பணிகளை நானே செய்வேன் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன் பதவி பறிப்பு
இதற்கு மறுநாளே செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.
செங்கோட்டையனை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் கூறியுள்ளார். சசிகலாவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய நிலையில், அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் வலுப்பெறுகிறதோ என்ற பேச்சு அக்கட்சியினரிடம் அதிகரித்துள்ளது.
டெல்லி சென்ற செங்கோட்டையன்
இத்தகைய பரபரப்புக்கிடையே செங்கோட்டையன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹரித்வாருக்கு ராமரை வழிபட செல்வதாகவும், யாரையும் சந்திக்கவில்லை என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே ஏற்பட்டிருக்கக்கூடிய கருத்து வேறுபாடு, அதிமுக வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பக்கம் தான் நிற்கிறோம்
இந்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளராக கருதப்பட்ட பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பண்ணாரி, இன்று ஏ.கே. செல்வராஜ்ஜை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே. செல்வராஜ், செங்கோட்டையனுக்கு பதிலாக அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ பண்ணாரி, "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்போம்" என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் செல்வராஜ்ஜை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் வதந்தி என்றும், எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்கிறோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த நடவடிக்கை
அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள கே.ஏ. செங்கோட்டையன், அடுத்த கட்ட நடவடிக்கையாக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் இன்று மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவான ஏ.கே. செல்வராஜ்ஜை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications