உங்க படம் எதுக்கு?.. எந்த பொறுப்பில் இருக்கீங்க?.. கேள்வி கேட்ட நபர்.. உதயநிதி அளித்த பதில்!
கோவையில் உள்ள திமுக நூலகம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: கோவையில் உள்ள திமுக நூலகம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தற்போது உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக சார்ந்த கூட்டங்களில் சமீப காலமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். திமுகவின் போஸ்டர்கள், கட் அவுட்களில் திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு அருகே இவரின் புகைபடமும் அடிக்கடி இடம்பிடித்து வருகிறது.
அதேபோல் லோக்சபா தேர்தலிலும் திமுக சார்பாக உதயநிதி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இவர் போட்டியிட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகிறது.

கிராமசபை கூட்டம்
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம் சபா கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பது பெரிய வைரலாகி உள்ளது. திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார். அதன்பின் ஆண்டிபட்டியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்களிடம் ஸ்டாலினை போலவே இவரும் பேசி வருகிறார்.

கேள்வி
இந்த நிலையில் கோவையில் உள்ள திமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் உருவாக்கிய நூலகத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினின் புகைப்படத்திற்கு அருகிலேயே உதயநிதி புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்டு இருக்கிறது.
|
கேள்வி கேட்டார்
இதை பார்த்து உதயநிதியிடம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் ''எந்த பொறுப்பில் இருக்கார்னு அவர் புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் வச்சிருக்கீங்க. உங்க விஸ்வாசத்துக்கு அளவில்லாம போயிடுச்சுடா. கண்டியுங்கள் உதயநிதி'' என்று டிவிட் செய்துள்ளார்.
|
என்ன பதில்
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார். அதில் ''என்னுடைய படம் நேற்றே அங்கிருந்து அகற்றப்பட்டது 🙏🏼'' என்றுள்ளார். உதயநிதியின் இந்த பதில் பலரை கவர்ந்து இருக்கிறது. பலர் உதயநிதியின் செயலுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications