we want you to lead CSK for many more season... தோனியிடம் ஸ்டாலின் கோரிக்கை - ரசிகர்கள் விசில்

நிறைய சீசன்களுக்கு தோனியே தலைமையேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைக்கவே அதை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். we want you to lead CSK for many more season என்று ஸ்டாலின் பேசவே அதற்கு ரசிகர்கள் விசிலடித்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

துபாயில் நடைபெற்ற 14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். விழாவில் பேசிய ஸ்டாலின், தானும் தனது தந்தையும் தனது பேரக்குழந்தைகளும் தோனியின் ரசிகர்கள்தான் என்று கூறினார். இந்த விழாவில் தானும் தோனியின் ரசிகராக வந்திருப்பதாகவே கூறினார். முதல்வரின் பேச்சை கேட்டு ரசிகர்கள் விசிலடித்து வரவேற்றனர்.2

நெருக்கடியில் இளைப்பாறல்

நெருக்கடியில் இளைப்பாறல்

நான் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் வெள்ள பாதிப்பு, நிவாரணப்பணிகள் குறித்தே நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன். நெருக்கடியான காலத்தில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றே இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பதாக கூறினார்.

மிகச்சிறந்த ஆளுமை

மிகச்சிறந்த ஆளுமை

கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது தோனிதான் என்று கூறிய முதல்வர், எத்தனை பரபரப்பு இருந்தாலும் எத்தனை நெருக்கடி இருந்தாலும் கருணாநிதியும் தோனியும் கூலாக இருப்பார்கள். ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் தோனி என்று புகழாரம் சூட்டினார்.

சவால்

சவால்

சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை விட அவர் சிறந்த கேப்டனாக நான் பார்க்கிறார். ஒரு அணியை வழிநடத்துவது சவாலான ஒன்று . சீனியர் முதல் இளம் வீரர்களை ஒருங்கிணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றி ஆளுமைக்கான சான்று.

தொடர வேண்டும்

தொடர வேண்டும்

ஒரு அணியை உருவாக்கியவர்தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார். ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி இருப்பதால்தான் அனைவராலும் பாரட்டப்படுகிறார். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வேண்டும் என்று கூறினார்.

விசிலடித்த ரசித்த ரசிகர்கள்

விசிலடித்த ரசித்த ரசிகர்கள்

இறுதியாக, we want you to lead CSK for many more season என்றார். ஒன்ஸ்மோர் கேளுங்க சொல்றேன் என்று கூறி மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தினார். மழை, வெள்ளம், அமைச்சரவைக்கூட்டம் என பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். முதல்வர் ஸ்டாலினின் பேச்சை ரசிகர்கள் பலரும் விசிலடித்து ரசித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+