“நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! அத்தனை தடைகளையும் உடைப்போம்”.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
சென்னை: "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்! அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சான்றிதழ்களை வழங்கினார். இவர்களில் 86 ஆண்கள், 11 பெண்கள் என 97 பேர் அர்ச்சகர்கள் பயிற்சியும், 9 பேர் ஓதுவார் பயிற்சியும், 9 தவில், நாதஸ்வரம் பயிற்சி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

இதுபற்றிய செய்தியை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம் கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம். பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்! பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970 ஆம் ஆண்டு அனைவரும் கோயில் கருவறைக்குள் செல்லும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் இயற்றப்படும். எனவே போராட்டம் வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பெரியார் போராட்டத்தைக் கைவிட்டார். அனைவரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவுகளில் திருத்தம் செய்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது.
2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாணை பிறப்பித்து, இதற்கான சட்டத்தையும் இயற்றினார். இதையடுத்து, சென்னை, ஸ்ரீரங்கத்தில் வைணவ அர்ச்சகர்களுக்கும் மதுரை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூரில் சைவ அர்ச்சகர்களுக்கும் என 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. 240 பேருக்கு 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பயிற்சி தொடங்கப்பட்டது.
பல்வேறு வழக்குகள் காரணமாக பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. கடந்த 2021 ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications