அண்ணாமலை பேசியதால் விட்டுக்கொடுத்தோம்.. இந்த முறை இரட்டை இலை சின்னம் உறுதி.. அடித்துச் சொன்ன ஓபிஎஸ்!
சென்னை: இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி, என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பாஜக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என அடித்துக் கூறி வருகிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸுக்கு அதிகாரம்: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்று தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் வழங்கி, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜக உடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என அறிவித்தார்.
பாஜக உடன் தான் கூட்டணி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், "10 ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். மீண்டும் 3வது முறையாக மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. பாஜக கூட்டணியில் தொடர்கிறோம். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்றார்.
தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதை எல்லாம் பின்னால் பேசுவோம் என மழுப்பலாக பதில் அளித்தார். வரும் மார்ச் 4ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது சந்தித்துப் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கும், "பின்னால் பார்ப்போம்" என பதில் அளித்தார் ஓபிஎஸ்.
தாமரை சின்னமா, இரட்டை இலையா?: தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், "ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிக தீர்வாகத்தான் அந்த தேர்தலுக்கு மட்டும் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. நல்ல முடிவு விரைவில் வரும். உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது, திமுகவுக்கு தோல்வியை அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால், கொங்கு பெல்ட்டிலேயே தோல்வியைத் தழுவினோம். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே முடிவு.
மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடுவோம். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். இரட்டை இலை சின்னத்தில் தான் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications